"பிரபாகரனின் கதையை முடித்து 30 கால போரை மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டுவந்ததாலேயே இன்று வடக்கிலும் தெற்கிலும் கூட்டங்களை நடத்த முடிகின்றது. மகிந்த ராஜபக்ச ஒரு சிறந்த தலைவர்" என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்தார். இலங்கை செய்தி

புலிகளின் கதையை முடித்த மஹிந்தவே சிறந்த தலைவர் – மார்தட்டும் தேரர்

  • September 14, 2026
  • 0 Comments

“பிரபாகரனின் கதையை முடித்து 30 கால போரை மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டுவந்ததாலேயே இன்று வடக்கிலும் தெற்கிலும் கூட்டங்களை நடத்த முடிகின்றது. மகிந்த ராஜபக்ச ஒரு சிறந்த தலைவர்” என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அனுராதபுரத்தில் நடத்திய கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சஜித், ரணில், நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. எதிரணியின் கூட்டம் […]

இந்தோனேசியாவின் ஜாவா கடலில் வார இறுதியில் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாயமான 129 பேரைக் தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோனேசிய படகு விபத்து: ஆறுபேர் பலி: தொடரும் தேடுதல்

  • September 14, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜாவா கடலில் வார இறுதியில் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாயமான 129 பேரைக் தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கிழக்கு ஜாவாவில் உள்ள சுராபயாவிலிருந்து (Surabaya) தெற்கு கலிமந்தனில் உள்ள பஞ்சர்மாசின் (Banjarmasin) நோக்கி 243 பயணிகளுடன் சென்ற ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ (Virgo Transport 8) […]

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் பிற பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையே திங்கள்கிழமை நடைபெறவிருந்த உயர்மட்டக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் இராஜதந்திர முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் – வளைகுடா நாடுகளின் முக்கிய கூட்டம் ஒத்திவைப்பு

  • September 14, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் பிற பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையே திங்கள்கிழமை நடைபெறவிருந்த உயர்மட்டக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் இராஜதந்திர முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அதேவேளையில், உலகின் மிக முக்கியமான இரண்டு எண்ணெய் வர்த்தகப் பாதைகளை ஒட்டிய பகுதிகளில் தொடரும் புதிய தாக்குதல்கள் காரணமாக, சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் தீவிரமடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை […]

செம்மணி புதைகுழி: ஐ.நா. விசாரணைகோரி யாழில் பேரணி இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: ஐ.நா. விசாரணைகோரி யாழில் பேரணி

  • September 14, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் படுகொலை தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும், சான்றுப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனிதப் புதைகுழி காணப்படுகின்றது. அதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமானது என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் […]

வடக்கிலுள்ள பௌத்த தொல்லியல் இடங்கள் இந்து மயமாக்கப்பட்டு வருவதாகவும், தெற்கில் சிங்களத் தலைவர்கள் பழிவாங்கப்பட்டு வருவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

பௌத்த அடையாளங்களுக்கு வடக்கில் ஆபத்து: பதறுகிறார் விமல்

  • September 14, 2026
  • 0 Comments

வடக்கிலுள்ள பௌத்த தொல்லியல் இடங்கள் இந்து மயமாக்கப்பட்டு வருவதாகவும், தெற்கில் சிங்களத் தலைவர்கள் பழிவாங்கப்பட்டு வருவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “புலம்பெயர் அமைப்புகளுக்கு உறுதியளிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலே அநுரவிடம் உள்ளது. மகாவலி அதிகாரசபையைக் கலைப்பது அதில் ஒன்றாகும். அவ்வாறு செய்தால் […]

ஆஸ்திரேலிய சட்டத்துறையின் முன்னோடி நீதிபதியான மேரி காட்ரான் (Mary Gaudron), தனது 83-வது வயதில் காலமானதை அடுத்து, ஆஸ்திரேலிய சட்டத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகப் பல தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றின் முதல் பெண் நீதியரசர் காலமானார்

  • September 14, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய சட்டத்துறையின் முன்னோடி நீதிபதியான மேரி காட்ரான் (Mary Gaudron), தனது 83-வது வயதில் காலமானதை அடுத்து, ஆஸ்திரேலிய சட்டத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகப் பல தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 1987-ஆம் ஆண்டு, தனது 44-வது வயதில் ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்ட மேரி காட்ரான், 2003-ஆம் ஆண்டு வரை அப்பணியில் தொடர்ந்தார். அவரது மறைவை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் பல அஞ்சலிக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதியாகப் […]

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, வெற்றிக் கிண்ணத்தை - ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மோசின் நக்வியிடமிருந்து (Mohsin Naqvi) பெற மறுத்துவிட்டது. செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கிண்ணம் வாங்க இந்திய அணி மறுப்பு

  • September 14, 2026
  • 0 Comments

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, வெற்றிக் கிண்ணத்தை – ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மோசின் நக்வியிடமிருந்து (Mohsin Naqvi) பெற மறுத்துவிட்டது. பரிசளிப்பு விழாவில் சாம்பியன் பட்டத்திற்கான கிண்ணத்தை வழங்க நக்வி மற்றும் பிற அதிகாரிகள் மேடையில் காத்திருந்த போதிலும், இந்திய வீராங்கனைகள் அதைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. எனினும், இலங்கை அணி பரிசளிப்பு விழாவில் பங்கேற்று இரண்டாம் இடத்திற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டது. முன்னதாக 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் […]

ஆசியக் கிண்ண தொடரில் இந்திய மகளிர் அணி, இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. செய்தி

இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்றது இந்திய மகளிர் அணி

  • September 14, 2026
  • 0 Comments

ஆசியக் கிண்ண தொடரில் இந்திய மகளிர் அணி, இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. துபாய், சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 10வது பெண்கள் ஆசிய கோப்பை ‘T-20’ தொடர் நடந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7 முறை சாம்பியனான இந்தியா, நடப்பு சாம்பியன்இலங்கை அணியை எதிர்கொண்டது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி தலைவி ஹர்மன்பிரீத் கவுர், முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி […]

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் கூட்டறிக்கையில் ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) சனிக்கிழமை கையெழுத்திட்டுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கு போருக்கு மத்தியில் ‘ராஜதந்திர திருப்பம்’

  • September 13, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் கூட்டறிக்கையில் ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) சனிக்கிழமை கையெழுத்திட்டுள்ளன. போரினால் பிரிந்து கிடந்த இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள ராஜதந்திர முன்னேற்றத்தின் அடையாளமாக இது பார்க்கப்படுகிறது. புதுடெல்லியில் நடைபெறும் உச்சிமாநாட்டின் முதல் நாளுக்கு இடையே, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), அபுதாபியின் இளவரசரைச் சந்தித்துப் பேசினார். மோதல் தொடங்கியதில் இருந்து இரு […]

இலங்கை மற்றும் இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் ஆண்டு தோறும் நடத்தப்படும் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX 2026- கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்தியா இலங்கை செய்தி

இலங்கை, இந்திய கடற்படை கூட்டு பயிற்சி நாளை ஆரம்பம்

  • September 13, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் ஆண்டு தோறும் நடத்தப்படும் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX 2026- கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில், செப்ரெம்பர் 14ஆம் திகதி (நாளை) முதல் 18 ஆம் திகதி வரை- ஐந்து நாள்கள் இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, இலங்கை கடற்படையின் எஸ்.எல்.என்.எஸ் சிந்துரால என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், கடந்த 11ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இரு கடற்படைகளுக்கும் […]