ஐரோப்பா

சதர்ன் வாட்டர் நிறுவனத்திற்கு 2.4 மில்லியன் பவுண்ட்ஸ் அபராதம் விதிப்பு

சதர்ன் வாட்டர் Southern Water  நிறுவனத்திற்கு பிராம்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பவுண்ட்ஸ் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2019 மற்றும் 2021-க்கு இடையில் கென்ட்டில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மாசுப்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகவே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் ஒரு டீசல் கசிவு ஆகியவை ஸ்வாலிக்ளிஃப் புரூக் Swalecliffe Brook, ஃபேவர்ஷாம் க்ரீக் Faversham Creek மற்றும் விட்ஸ்டபிள் துறைமுகத்தை மாசுபடுத்தியதுடன், சுமார் 70 மீன்களைக் கொன்றன.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து ஏற்பட்ட மாசுபாட்டைத் தொடர்ந்து, கேன்டர்பரி நகர சபை, விடுமுறை காலங்களில் உள்ளூர் கடற்கரைகளில் நீந்துவதைத் தவிர்க்குமாறு பொது சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட்டது.

இந்த மாசுபாட்டிற்கு சதர்ன் வாட்டர் நிறுவனம் மன்னிப்புக் கோரியதுடன், அதிகப்படியான மழையே இதற்குக் காரணம் என்றும், அதன் பின்னர் வலையமைப்பு மேம்பாடுகளுக்காக £35 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்