உலகம் செய்தி

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தல்: ஐ.நா. விசனம்!

  • April 9, 2026
  • 0 Comments

லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களை ஐ.நா. செயலாளர் Antonio Guterres வன்மையாகக் கண்டித்துள்ளார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அங்கு நிலவும் சூழல் மிகவும் அபாயகரமானது என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் குறித்த இராணுவ நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது எனவும் ஐ.நா. செயலாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தாக்குதலை உடன் நிறுத்துமாறு அவர வலியுறுத்தியுள்ளார். லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய உக்கிர […]

இந்தியா தமிழ்நாடு

தே.மு.தி.கவிலிருந்து விலகிய மீசை ராஜந்திரன் அ.தி.மு.கவில் சங்கமம்!

  • April 9, 2026
  • 0 Comments

தமிழக சட்டபேரவை தேர்தலுக்கான நாள் நெருங்கிவரும் நிலையில், அரசியல் களமும் அனல் கக்குகின்றது. கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகள் வெற்றிகரமாக முடிந்திருந்தாலும் கட்சி தாவும் படலம் இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் தே.மு.தி.கவின் செய்தித் தொடர்பாளர் மீசை ராஜேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.கவில் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் மீசை ராஜேந்திரன். இவருக்குத் திரையுலகில் களம் அமைத்துக் கொடுத்தவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதன் காரணமாக, கடந்த […]

ஆஸ்திரேலியா செய்தி

லெபனான்மீதான தாக்குதலை உடன் நிறுத்துமாறு ஆஸ்திரேலியா வலியுறுத்து!

  • April 9, 2026
  • 0 Comments

லெபனான்மீதான தாக்குதல்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong வலியுறுத்தியுள்ளார். மேற்படி தரப்புகளுக்கு இடையிலான மோதலானது ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரு வார கால போர் நிறுத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பதில் தடை ஏற்படக்கூடும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தத்துக்கு பிறகு லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 250 இற்கு மேற்பட்டோர் […]

விளையாட்டு

இறுதி பந்துவரை பரபரப்பு: போராடி தோற்றது டெல்லி!

  • April 9, 2026
  • 0 Comments

Delhi Capitals மற்றும் Gujarat Titans ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. IPL 2026 தொடரின் 14 ஆவது லீக் ஆட்டம் அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Delhi Capitals தலைவர் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் தலைவர் சுப்மன் கில் 45 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்றார். ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 52 ஓட்டங்களையும், […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரியை மூடிமறைக்க முயற்சி?

  • April 9, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சஹ்ரானை பிரதான சூத்திரதாரியாக்கி, உண்மையை மூடிமறைப்பதற்கு முற்படக்கூடாது. பிரதான சூத்திரதாரி கண்டறியப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி ITAK வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் Gnanamuththu Srinesan இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உதய கம்மன்பில புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார். சஹ்ரானை பிரதான சூத்திரதாரியாக […]

உலகம் செய்தி

ஈரான்போர்: ட்ரம்பை புகழ்கிறார் நேட்டோ செயலாளர்!

  • April 9, 2026
  • 0 Comments

நேட்டோ Nato அமைப்பின் பொதுச்செயலாளர் Mark Rutte மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump ஆகியோருக்கு இடையில் வாஷிங்டனில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நேட்டோ கூட்டணி நாடுகளின் செயல்பாடுகள் குறித்து ட்ரம்ப் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு பதிளித்த நேட்டோ செயலாளர், அவ்வமைப்பின் வகிபாகம் பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தகுந்த பங்களிப்பை அளித்து வருவதாகவும் Mark Rutte சுட்டிக்காட்டியுள்ளார். ட்ரம்புடனான கலந்துரையாடல் மிகவும் நேர்மையாக அமைந்ததாகவும் தெரிவித்தார். குறிப்பாக, […]

உலகம் செய்தி

போர் நிறுத்த பொறிமுறைக்குள் லெபனான் இல்லை: ட்ரம்ப் கைவிரிப்பு!

  • April 8, 2026
  • 0 Comments

இருவார கால போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்குவைத்து இஸ்ரேல் உக்கிர தாக்குதலை நடத்தியுள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று கோரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ஈரான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போர் விதிமீறல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பினர் தனியாகக் கையாளப்படுவார்கள் எனவும் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: லெபனானில் 89 பேர் பலி! ஈரான் கடும் எச்சரிக்கை!

  • April 8, 2026
  • 0 Comments

லெபனானில் பல பகுதிகளிலும் இஸ்ரேல் இன்று நடத்திய உக்கிர தாக்குதலில் 89 பேர் பலியாகியுள்ளனர். 700 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவார கால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இது தொடர்பில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேலும் இதற்கு இணங்கியுள்ளது. குறித்த போர் நிறுத்தம் லெபனானுக்கும் பொருந்தும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போர் நிறுத்தம் லெபனான் விவகாரத்தில் தொடர்புபடாது எனக் குறிப்பிட்டு, […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் தாக்குதலை தடுக்க சர்வதேச உதவியை நாடுகிறது லெபனான்!

  • April 8, 2026
  • 0 Comments

லெபனான்மீது இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க அந்நாட்டுப் பிரதமர் Nawaf Salam சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளார். தலைநகர் பெய்ரூட் உட்பட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் பயங்கரமானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் போரினால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் எடுத்து வரும் இந்த ராணுவ நடவடிக்கை தற்போது […]

இலங்கை செய்தி

“நம்பிக்கையில்லாப் பிரேரணை”- அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

  • April 8, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சரவை பதில் பேச்சாளராக விஜித ஹேரத் பங்கேற்றிருந்தார். எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் […]