ஈரான் ஜனாதிபதியுடன் ஜப்பான் பிரதமர் அவசர பேச்சு!
அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையைக் காட்டுமாறு ஈரானிடம், ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் ஜனாதிபதிக்கும் Masoud Pezeshkian , ஜப்பான் பிரதமருக்கும் Sanae Takaichi இடையில் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்குமாறு இதன்போது ஜப்பான் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிய நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் கடல்சார் வணிகப் பாதுகாப்பு குறித்து இந்த ஆலோசனையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் இருதரப்பு உறவுகளைத் தொடரவும், எதிர்காலத் தொடர்புகளை வலுப்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டவும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்கவும் ஜப்பான் முயற்சி என்பது புலனாகின்றது.




