ஐரோப்பா செய்தி

‘அணுசக்தி ஒப்பந்த பேச்சு’ – தொழில்நுட்ப ஆலோசனை வழங்க பிரான்ஸ் தயார்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை எட்ட ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டவுடன், ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேசப் பணியில் பிரான்ஸ் தீவிரமாகப் பங்கேற்கும் என்று அவர் உறுதியளித்தார்.

குறிப்பாக, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் பிரான்ஸ் தயாராக உள்ளது அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதே பிரான்ஸ் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

லெபனான் விவகாரம்

லெபனான் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு டிரம்ப் அளித்துள்ள உறுதிப்பாட்டை மேக்ரான் பாராட்டியுள்ளார்.

லெபனானில் ஒரு வலுவான போர்நிறுத்தம் (Ceasefire) ஏற்படுவதன் அவசியத்தையும், லெபனான் அதிகாரிகளுக்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் கூட்டு ஆதரவு வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி