ஆஸ்திரேலியா செய்தி

மேற்குகரை வன்முறை: இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியா தடை!

பாலஸ்தீனப் பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைக்கு எதிரொலியாக, மேற்கு கரையில் (West Bank) உள்ள இஸ்ரேலிய குடியேற்ற விவசாய புறக்காவல் நிலையங்கள் (farming outposts) மீது ஆஸ்திரேலியா முதன்முறையாக தடைகளை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் நான்கு பண்ணை புறக்காவல் நிலையங்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது ராஜதந்திர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சொத்துக்களை அழித்தல் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்கள் போன்ற செயல்களைச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர்  Penny Wong  வலியுறுத்தியுள்ளார்.

இத்தடையின் விளைவாக, சம்பந்தப்பட்ட நபர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முடியாது மற்றும் அவர்களுடன் எவ்வித நிதி பரிவர்த்தனைகளும் மேற்கொள்ள முடியாது.

சர்வதேச சட்டங்களை நிலைநாட்டவும், பிராந்தியத்தில் அமைதியை உருவாக்கவும் ஆஸ்திரேலியா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

கடந்த மே மாதம் பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்களை கடுமையாக சாடி வீடியோ வெளியிட்ட இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்வீர் (Itamar Ben-Gvir) மீதும் ஆஸ்திரேலியா இதற்கு முன்பு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!