உலகம் செய்தி

லெபனானிலும் போர் நிறுத்தத்தைக் கோருகிறது ஈரான்!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது லெபனான் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறிப்பிட்ட ஒரு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது ஒட்டுமொத்தப் போர்நிறுத்தத்தை மீறுவதற்குச் சமம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லெபனான், பெய்ரூட் மீது தரைவழித் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பானது, ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும்.

இதனால் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள்மீதும், ஏனைய இடங்கள்மீதும் இஸ்ரேல் கோரத் தாக்குதல் நடத்திவருகின்றது. இதனால் பொதுமக்களும் பலியாகவருகின்றனர்.

அத்துடன், பாலஸ்தீனம் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் குழுவும், ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும்.

அவ்வமைப்புமீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது.
இந்நிலையிலேயே லெபனான் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளிலும் போர் நிறுத்தத்துக்குரிய உத்தரவாதத்தை ஈரான் கோரியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி