காலநிலை மாற்றம் குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க குழு நியமனம் – ஸ்பெயின் ஒப்புதல்
காலநிலை மாற்றத்தின் காரணமாக ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகளில் காடுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் அல்லது வழிக்காட்டுதல் நெறிமுறைகளை வழங்கும் குழுவை நியமிக்க அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தீர்மானம் நேற்றைய தினம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவிற்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் கோடைக்காலப்பகுதியில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் குழு இலையுதிர் காலத்தில் தனது பணியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அரசாங்கத் துறைகளால் எழுப்பப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, இந்தப் பணிக்குழு சுதந்திரமான, கடுமையான மற்றும் பல்துறை பகுப்பாய்வை வழங்கும், எனவும் கூறப்படுகிறது.
ஸ்பெயின், முன்னெப்போதும் இல்லாத காட்டுத்தீ அலையை எதிர்த்துப் போராடிவருகின்றது. அங்கு இதுவரை 77,000 ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதி நாசமாகியுள்ளதுடன், 63,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் 35000 இற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை முற்றாக இழந்துள்ளனர்.




