ஸ்பெயினில் கால்பந்து வீரர்களுக்கு அமோக வரவேற்ப்பு – தெருக்களில் குவிந்த மில்லியன் கணக்கான மக்கள்
FIFA கால்பந்து உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி கைப்பற்றிய பிறகு மாட்ரிட் தெருக்களில் பெருமளவிலானோர் ஒன்றுக்கூடி பெறும் வரவேற்பை அளித்தனர்.
சுமார் ஒரு மில்லியன் மக்கள் தெருக்களில் ஒன்றுக்கூடி ஆரவாரம் செய்தனர்.
வெற்றி அணிவகுப்பு ஸ்பெயின் தலைநகர் வழியாக சென்றதுடன், அங்கு குழுமியிருந்த மக்கள் “எஸ்பானா, எஸ்பானா” எனக் கோஷமிட்டனர்.
இந்நிலையில் கூட்டத்தின் மத்தியில் பயணித்த பேருந்தில் இருந்த வீரர்கள் உலகக் கோப்பை வெற்றிக் கிண்ணத்தை உயர்த்தி பிடித்து ஆரவாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது.





