ரஷ்யாவை வெறிகொண்டு தாக்கிய உக்ரைன் – 06 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் 800இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஏவி உக்ரைன் நேற்று தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலாக இது வர்ணிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கியமாக தெற்கு மற்றும் மேற்கு ரஷ்யாவில் உள்ள 17 பிராந்தியங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலால் ரஷ்ய மின் வணிக நிறுவனமான வைல்ட்பெர்ரீஸுக்குச் சொந்தமான ஒரு கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.




