12,000 ‘பாலியல் அச்சுறுத்தல்’ அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது
ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பெண்களை இலக்கு வைத்து, அவர்களுக்குச் பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் 12,000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட 27 வயது நபரை வடக்கு பிராந்திய (Northern Territory) காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த அத்துமீறல் சம்பவம் நடப்பு ஆண்டின் ஜூன் 19 அன்று தொடங்கினாலும், ஒரு மாதத்திற்குப் பிறகே காவல்துறைக்குமுறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. “குறிப்பிட்ட தொலைபேசி எண் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) பகுதியில் இருப்பதை அடையாளம் […]













