மாற்றத்தை ஏற்படுத்துவேன்: பதவி பறிபோனால்கூட கவலையில்லை – அநுர
“நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அதிகாரத்திற்கு வந்தேன். ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அந்த மாற்றம் நிகழாது என்பதை நான் அறிவேன். எனவே, நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதனால் எனது பதவி பறிபோனாலும்கூட அதனை மனப்பூர்வமாக ஏற்று விலகத் தயார்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு […]













