அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு பதிலடி: ஈரான் எச்சரிக்கை
ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் வகையில் அமெரிக்காவால் விரிவாக்கப்பட்ட கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதம் செய்துள்ளது. வாஷிங்டனின் இந்த நெருக்குதல் நடவடிக்கைகளுக்குத் தங்களின் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்றும் தெஹ்ரான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க திறைசேரிச் செயலாளர் (Treasury Secretary) ஸ்காட் பெசென்ட் இப்புதிய தடைகளை திங்கள்கிழமை அறிவித்தார். இருப்பினும், ஈரானுடன் தொடர் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்க டாலர் அடிப்படையிலான நிதி அமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்கொள்ள […]













