அமெரிக்காவில் கடும் விசா கெடுபிடி: இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிவு
அமெரிக்காவில் கடும் விசா கெடுபிடி: இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிவு
அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் குறித்த கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக CNBC செய்தி வெளியிட்டுள்ளது.
Common App அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் தயாரித்துள்ள இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
விண்ணப்பங்களில் கடும் சரிவு 2026-27
கல்வியாண்டிற்கான இளங்கலை சேர்க்கைக்கான ஒட்டுமொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள் 10% வரை குறைந்துள்ளன.
டிஜிட்டல் முறையில் தரவுகள் சேகரிக்கத் தொடங்கியதில் இருந்து பதிவான மிகப்பெரிய சரிவு இதுவாகும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச கல்வி நிறுவனத்தின் (IIE) தரவுகளின்படி, கடந்த 2025 இலையுதிர்காலப் பருவத்தில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை 17% குறைந்தது.
வரும் கல்வியாண்டிலும் இது மேலும் குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆசியா, ஆப்பிரிக்க மாணவர்களிடம் பெரும் வீழ்ச்சிமுக்கியமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் இரட்டை இலக்க அளவில் (Double-digit decline) சரிவைக் கண்டுள்ளன.
விசா நடைமுறைகளில் உள்ள கட்டுப்பாடுகள், பட்டப்படிப்புக்குப் பிந்தைய வேலை வாய்ப்புக் கொள்கைகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை இதற்குக் முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.
பொருளாதாரப் பாதிப்பு
சர்வதேச மாணவர்கள் வருகை குறைவதால் அமெரிக்காவின் உள்ளூர் பொருளாதாரத்திற்கு சுமார் 3.4 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சர்வதேச கல்வியாளர்கள் சங்கம் (NAFSA) எச்சரித்துள்ளது.
மேலும், இதன் காரணமாக அமெரிக்காவில் சுமார் 40,000 வேலைவாய்ப்புகள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.



