கிழக்கு கடலில் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்த வடகொரியா
வடகொரியா இன்றைய தினம் கடலைநோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தென் கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி, வட கொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை சுட்டதாக ஜப்பான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியா இந்த மாதத்தில் முற்கொள்ளும் இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.
அமெரிக்காவும், தென்கொரியாவும் அடுத்த வாரம் வருடாந்திர போர் பயிற்சியை மேற்கொள்ளவுள்ள நிலையில், வடகொரியா இவ்வாறான ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




