ஐரோப்பா

பிரான்ஸில் சட்டவிரோத போராட்டங்களுக்கு தடை – மக்ரோன் அறிவிப்பு

  • October 23, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வரும் நாட்களில் சட்டவிரோத போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். உளவுத்துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் நேற்று  இடம்பெற்ற சந்திப்பிற்கு  பிறகே  மக்ரோன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து பேசிய அவர், கடந்த வார இறுதியில் நடந்த கலவரங்கள் மற்றும் கொள்ளைகளுக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களும் நாசகாரர்களுமே காரணம் என்றும் குற்றம் சாட்டினார். தொழிற்சங்கங்கள் போன்ற குழுக்களால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர அனுமதிக்கப்படும் என்றும், ஆனால் வணிகங்களைப் […]

ஐரோப்பா

பிரெஞ்சு போராட்டங்கள் – ட்ரம்பின் கருத்துக்கு மக்ரோன் பதிலடி

  • October 22, 2026
  • 0 Comments

பிரான்சில் பரவிவரும் கலவரங்கள் குறித்து அமெரிக்கா முன்வைத்த விமர்சனங்களுக்கு, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் இன்று பதிலடி கொடுத்துள்ளது. பிரான்ஸில் தற்போது அதிகரித்து வரும் கலவரங்களுக்கு குடியேறிகளே காரணம் என்றும் அந்நாடு விரைவில் முஸ்லிம் நாடாக மாறும் எனவும் ட்ரம்ப் விமர்சித்திருந்தார். இதற்கிடையே பிரான்சில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது, ​​முகமூடி அணிந்த ஆண்கள் ஒரு பெரிய தீக்கு முன்னால் நிற்கும் காணொளியை ICE அமைப்பு பகிர்ந்து, “அமெரிக்கத் தெருக்கள் இப்படிக் காட்சியளிப்பதைத் தடுக்க நாங்கள் ஒவ்வொரு நாளும் போராடுகிறோம்” […]

ஐரோப்பா

மக்ரோனின் வளைகுடா பயணம் – மாதத்திற்கு 200,000 டன் டீசலை பெற உறுதிமொழி

  • October 21, 2026
  • 0 Comments

வளைகுடா நாட்டிற்கான தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நேற்று கத்தார் வந்தடைந்துள்ளார். அவரை கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி Sheikh Tamim bin Hamad Al Thani , பீரங்கி முழக்கங்கள் மற்றும் குதிரைப்படை அணிவகுப்பு உள்ளிட்ட முழுமையான அரசு மரியாதைகளுடன் வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் லுசைல் அரண்மணைக்கு சென்றனர். அங்கு எரிசக்திப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை, அத்துடன் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் மாணவர்களின் போராட்டத்திற்கு தீர்வை முன்வைக்குமாறு மக்ரோன் வலியுறுத்து

  • October 14, 2026
  • 0 Comments

பிரான்ஸில் மாணவர்களின் போராட்டங்களை நியாயமானது எனக் கூறிய மக்ரோன் கூறியதாகவும்,  அவர்களை  அரசியல் சக்திகள்  ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்வதாகவும்  அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று தெரிவித்தார். மாணவர்களின் இந்தப் போராட்டங்களுக்குச் சில வாரங்களுக்குள் “திட்டவட்டமான தீர்வுகள் அல்லது பதில்களை” முன்வைக்குமாறு ஜனாதிபதி மக்ரோன் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார். வாரந்த அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து மக்ரோன் இவ்வாறு வலியுறுத்தியதாக  அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை பாரிஸில் நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தில்,   1,61,500 பேர் பங்கேற்றதாக […]

ஐரோப்பா

ரஷ்யாவின் எண்ணெய் கப்பல் முற்றுகை – மக்ரோன் தகவல்

  • June 25, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் நிழல் கப்பல் படையைச் சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்றை பிரெஞ்சு படைகள் இடைமறித்ததாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சிசிலி கடற்கரைக்கு அப்பால் “கடல்சார் சட்டத்தை மீறி” பயணித்துக் கொண்டிருந்த “டெலிவர்” என்ற கப்பலை கடற்படை இடைமறித்ததாக கூறியுள்ளார். அதேநேரம் படையினர் கப்பலில் ஏறி சோதனையிடுவதைக் காட்டுவதாகத் தோன்றும் காணொளிக் காட்சிகளை மக்ரோன் பகிர்ந்துள்ளார். டெலிவர் என்பது கேமரூனியக் கொடியைக் கொண்ட ஒரு கப்பலாகும். […]

ஐரோப்பா

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் – செல்வாக்கை நிலைநாட்ட முயலும் மக்ரோன்!

  • May 10, 2026
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மக்ரோன் கிழக்கு ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தைத் நேற்று தொடங்கியுள்ளார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், அவரது இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்ரோன் இந்த பயணத்தின்போது கென்யா மற்றும் எத்தியோப்பியாவிற்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒரு உச்சிமாநாட்டை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாடு ஆப்பிரிக்கத் தலைவர்களையும் வணிக நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் அதேவேளை பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன்  இந்தப் பயணத்தின் […]