பிரான்ஸில் மாணவர்களின் போராட்டத்திற்கு தீர்வை முன்வைக்குமாறு மக்ரோன் வலியுறுத்து
பிரான்ஸில் மாணவர்களின் போராட்டங்களை நியாயமானது எனக் கூறிய மக்ரோன் கூறியதாகவும், அவர்களை அரசியல் சக்திகள் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்வதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று தெரிவித்தார்.
மாணவர்களின் இந்தப் போராட்டங்களுக்குச் சில வாரங்களுக்குள் “திட்டவட்டமான தீர்வுகள் அல்லது பதில்களை” முன்வைக்குமாறு ஜனாதிபதி மக்ரோன் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வாரந்த அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து மக்ரோன் இவ்வாறு வலியுறுத்தியதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாரிஸில் நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தில், 1,61,500 பேர் பங்கேற்றதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாரிஸ் மற்றும் லியோன் நகரங்களில் நடைபெற்ற பேரணிகளின்போது சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
இதற்குப் பதிலடியாகக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதில் 11 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




