மக்ரோனின் வளைகுடா பயணம் – மாதத்திற்கு 200,000 டன் டீசலை பெற உறுதிமொழி
வளைகுடா நாட்டிற்கான தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நேற்று கத்தார் வந்தடைந்துள்ளார்.
அவரை கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி Sheikh Tamim bin Hamad Al Thani , பீரங்கி முழக்கங்கள் மற்றும் குதிரைப்படை அணிவகுப்பு உள்ளிட்ட முழுமையான அரசு மரியாதைகளுடன் வரவேற்றார்.
பின்னர் இரு தலைவர்களும் லுசைல் அரண்மணைக்கு சென்றனர்.
அங்கு எரிசக்திப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை, அத்துடன் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிரான்ஸ் மற்றும் கத்தாருக்கு இடையேயான மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.
The official reception ceremony for #French President @EmmanuelMacron took place at #Lusail Palace on Tuesday, following his welcome by Qatar’s Amir Sheikh @TamimBinHamad Al Thani.
The ceremony opened with the national anthems of #Qatar and #France, followed by an inspection of… pic.twitter.com/WRt4hu6Yvr
— Doha News (@dohanews) October 20, 2026
முக்கியமாக எரிசக்தி விநியோகத்திற்கான வாக்குறுதிகளை மக்ரோன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தப் பயணம் ஏற்கனவே கூடுதல் டீசலுக்கான உறுதிமொழிகளைப் பெற்றுத் தந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிடமிருந்து மாதத்திற்கு கூடுதலாக 200,000 டன்கள், அதாவது ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சுமார் 100,000 டன்கள், பெறுவதற்கான உறுதிமொழிகளை பிரான்ஸ் பெற்றுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது.
சவூதி அரேபியாவிலிருந்து வரும் விநியோகங்களையும் சேர்த்து, இந்த உறுதிமொழிகளின் மொத்த அளவு மாதத்திற்கு 295,000 டன்கள் ஆகும், இது பிரான்சின் நுகர்வில் 10 சதவீதத்திற்கும் சற்று அதிகமாகும் என்று எலிசே மாளிகை கூறியுள்ளது.




