இந்தியா உலகம் செய்தி

இரு தரப்பு உறவு வலுவடையும்: இந்தியா, இத்தாலி பிரதமர்கள் உறுதி!

  • May 20, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் ஆழப்படுத்துவதற்கு இரு நாடுகளின் பிரதமர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். அதன்பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். “இந்தியா- இத்தாலி உறவு முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் விரிவடைந்து தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, ஒரு சுமூகமான நட்பிலிருந்து சுதந்திரம், ஜனநாயகம், எதிர்காலத்துக்கான ஒரு பகிரப்பட்ட […]

உலகம் செய்தி

போரால் இஸ்ரேல் விமான நிறுவனத்துக்கு பேரிழப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

ஈரான் மீதான போர் நடவடிக்கைகளின் காரணமாக, இஸ்ரேலின் தேசிய விமான சேவை நிறுவனமான ‘எல் அல்’ (El Al) கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. போர்ச் சூழல் காரணமாக வான்வெளிகள் மூடப்பட்டதால், வணிக ரீதியிலான பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் விளைவாக, நடப்பு ஆண்டின் முதலாவது காலாண்டில் மட்டும் ‘எல் அல்’ நிறுவனம் சுமார் 67 மில்லியன் டாலர் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியின் லாபத்துடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் தற்போதைய வருவாய் 27 […]

இந்தியா செய்தி

செப்டம்பரில் இந்தியா வருகிறார் புடின்!

  • May 20, 2026
  • 0 Comments

BRICS நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வருகின்றார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. குறித்த அமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் உள்ளது. இந்நிலையில் மே 14ஆம் திகதி பிரிக்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

படையினருக்காக நாம் களமிறங்குவோம்: ராஜபக்சவின் மகன் சூளுரை!

  • May 20, 2026
  • 0 Comments

“எவ்வாறான அச்சுறுத்தல்கள், சவால்கள் வந்தாலும் ஒற்றையாட்சி மற்றும் ராணுவத்தை பாதுகாப்பதற்கு நாம் எப்போதும் முன்நிற்போம்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “நாம் தமிழர்களுக்கு எதிராக போர் செய்யவில்லை. புலிகளுக்கு எதிராகவே போர் முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பவர்களுக்கு நினைவுகூர இடமளிக்கப்படுகின்றது. ஆனால் விமல் வீரவன்சவுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஆளுந்தரப்பு வெக்கப்பட வேண்டும். அதேவேளை, பொருளாதாரம் […]

செய்தி விளையாட்டு

ஓரிடத்துக்காக 5 அணிகளுக்கிடையில் போட்டி!

  • May 20, 2026
  • 0 Comments

2026 IPL கிரிக்கெட் தொடரில் play-off சுற்றில் வெற்றிடமாக உள்ள ஓரிடத்துக்கு வாய்ப்பை பெறுவதற்கு 5 அணிகளுக்கிடையில் போட்டி நிலவுகின்றது. கடந்த தொடர்களை விடவும் இம்முறை IPL சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏற்கனவே play-off சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (18 புள்ளிகள்) அணி, முதல் அணியாக play-off சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் […]

செய்தி விளையாட்டு

கொல்கத்தா அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!

  • May 20, 2026
  • 0 Comments

IPL 2026 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 65 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் கொல்கத்தா அணியின் play off வாய்ப்பு சற்று அதிகரிக்கும். அதேவேளை, ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் கொல்கத்தாவின் playoff வாய்ப்பு சரிந்து பிற அணிகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

செய்தி விளையாட்டு

சூரியவன்ஷி அதிரடி: ராஜஸ்தான் வெற்றி!

  • May 20, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி […]

இலங்கை ஐரோப்பா செய்தி

“அரசியலையும், அபிவிருத்தியையும் பிரிக்க முடியாது” – பிரிட்டனில் பிரதமர் உரை!

  • May 20, 2026
  • 0 Comments

“அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும், தெரிவுகளையும் அரசியலே வடிவமைக்கின்றது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், பிரைட்டன் நகரில் அமைந்துள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி ஆய்வுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, […]

அரசியல் இலங்கை செய்தி

இன அழிப்பு குறித்து விஜய்க்கு ஏன் கடிதம் எழுத வேண்டும்: மஹிந்த அணி கொதிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

“புலிகள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த 2 லட்சத்து 90 தமிழ் மக்களை எமது ராணுவமே மீட்டது. இன அழிப்பை நாமே தடுத்தோம். எனவே, இன அழிப்பு தொடர்பில் எந்த அடிப்படையில் தமிழக முதல்வருக்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் எழுத முடியும்” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். “ மே 18 ஆம் திகதியை […]

உலகம் செய்தி

போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வு: மஹிந்தவுக்கு கதவடைப்பு?

  • May 20, 2026
  • 0 Comments

கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்விற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், “ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் […]