விளையாட்டு

இன்று களமிறங்குகிறார் தோனி?

  • April 14, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் Chennai Super Kings , Kolkata Knight Riders ஆகிய அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 4 போட்டிகளில் ஆடியுள்ள CSK 1 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதேபோல 4 போட்டிகளில் விளையாடியுள்ள Kolkata Knight Riders 3 தோல்வி , 1 ஆட்டம் மழையால் ரத்தால் புள்ளிப்பட்டியலில் கடைசி […]

ஆஸ்திரேலியா செய்தி

எரிபொருள் விலையேற்றத்தால் விமான சேவையை மட்டுப்படுத்தியது Qantas!

  • April 14, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான குவாண்டாஸ் (Qantas) தனது விமானச் சேவைகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் செலவு சுமார் 800 மில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டுப் பயணங்களுக்கான இடங்கள் குறைக்கப்பட்டு சர்வதேச வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துவிட்டு, அதிக தேவையுள்ள பாரிஸ் மற்றும் […]

விளையாட்டு

Rajasthan Royals அணியை பந்தாடியது Sunrisers Hyderabad

  • April 14, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்று நடைபெற்ற 21 ஆவது லீக் ஆட்டத்தில் Sunrisers Hyderabad அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றிபெற்ற Rajasthan Royals அணியின் வெற்றிநடைக்கு இதன்மூலம் தற்காலிகமாக முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. ஐதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Rajasthan Royals அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய Sunrisers Hyderabad அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ஓட்டங்களைப் […]

உலகம் செய்தி

லெபனான், இஸ்ரேலுக்கிடையில் அமைதி பேச்சு: Marco Rubio பங்கேற்பு!

  • April 14, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சில் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் Marco Rubio யும் பங்கேற்கவுள்ளார். வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில், லெபனான் மற்றும் இஸ்ரேலிய தரப்பினர் பங்கேற்று, தெற்கு லெபனானில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடவுள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். பெருமளவான உடமைகளும் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் லெபனான் அரச தரப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் அமைதி […]

இலங்கை

04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

  • April 13, 2026
  • 0 Comments

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று முதல் நாளை பிற்பகல் 04 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு  ‘ Level 1’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

அமைதி முயற்சி தொடர்கிறது: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

  • April 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் மோதல்களைத் தணிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் Shehbaz Sharif தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் (11) சனிக்கிழமை நடைபெற்ற இருதரப்புப் அமைதி பேச்சு எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இந்நிலையிலேயே மேற்படி கலந்துரையாடலுக்கு மத்தியஸ்தம் வகித்த பாகிஸ்தானின் பிரதமர், அமைதியை ஏற்படுத்துவதற்குரிய முயற்சி தொடர்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார். தீர்க்கப்படாத சிக்கல்களைச் சரிசெய்ய பாகிஸ்தான் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அமைச்சரவைக் கூட்டத்தில் […]

உலகம் செய்தி

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கி சீனாவை இலக்கு வைக்கும் ட்ரம்ப்!

  • April 13, 2026
  • 0 Comments

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்குவதன் மூலம் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சீனா தனது எரிசக்தி தேவைகளுக்கு ஈரானை அதிகம் நம்பியுள்ளதால் இந்தத் தடையின் மூலம் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா கருதுகின்றது. அவ்வாறு நடந்தால் ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு சீனா வற்புறுத்தும் என வாஷிங்டன் கருதுகின்றது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்ஓர் அங்கமாகவே ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் உள்ள ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடுவதற்காக பெரிய அளவிலான […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: சர்வதேச மாநாட்டை நடத்த தயாராகும் பிரான்ஸ், பிரிட்டன்!

  • April 13, 2026
  • 0 Comments

“ஹார்முஸ் நீரிணை வழியாக தடையற்ற, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிசெய்வதற்குரிய சர்வதேச முயற்சிக்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தலைமை வகிக்கும்.” இவ்வாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன் Emmanuel Macron தெரிவித்தார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கத்திலேயே அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதலுக்கு, இராஜதந்திர வழியில் நீடித்த தீர்வை காண அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். தீர்வு திட்டமானது […]

இலங்கை

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • April 13, 2026
  • 0 Comments

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏதேனும் நுகர்வோர் சந்தையில் அநீதி அல்லது பிரச்சினைகளை எதிர்கொண்டால், அலுவலக நேரங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துத் தகவல்களை வழங்க முடியும் என அந்த அதிகார சபையின் தகவல் மற்றும் நுகர்வோர் விவகார பணிப்பாளர் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க எச்சரிக்கைக்கு எதிர்வினையாற்றியது சீனா! பிரிட்டனும் கைவிரிப்பு!!

  • April 13, 2026
  • 0 Comments

ஹார்மூஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களும் முற்றுகையிடப்படும் என அமெரிக்க தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், அனைத்து தரப்புகளும் அமைதியை பின்பற்ற வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. ஊலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹார்முஸ் நீரிணை தடையின்றி இயங்குவது அவசியம் என்று சீனா வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்க சீனா தயார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனவே, […]