உலகம் செய்தி

ட்ரம்பின் துறைமுக முற்றுகை வியூகத்துக்கு ஈரான் ராணுவம் பதிலடி!

  • April 13, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்காவின் துறைமுக முற்றுகைத் திட்டத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. துறைமுகங்கள் முடக்கப்பட்டால் அதனை கடற் கொள்ளை செயலாகக் கருதி பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை தமது நாட்டு கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனினும், இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை திறக்குமாறு பல தடவைகள் ஈரானிடம் ட்ரம்ப் வலியுறுத்திவிட்டார். ஆனால் ஈரான் இதற்கு இணங்கவில்லை. இந்நிலையிலேயே […]

உலகம் செய்தி

ஈரான், அமெரிக்கா மீண்டும் பேச்சு நடத்த வேண்டும்: 10 நாடுகள் கூட்டாக வலியுறுத்து!

  • April 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் நிரந்தர போர் நிறுத்த ஏற்பட வேண்டும் என ஆசியான் ASEAN நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இஸ்லாபாமாத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையிலேயே மேற்படி வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வர்த்தகத்திற்கு அவசியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆசியான் வெளிவிவகார அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். எரிசக்தி இறக்குமதிக்கு ஹார்முஸ் நீரிணை வழியை பெரிதும் நம்பியிருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், சர்வதேச […]

இந்தியா செய்தி

மூட நம்பிக்கையின் உச்சம்: சிறுவன் பலி! நடந்தது என்ன?

  • April 13, 2026
  • 0 Comments

பாம்பு தீண்டலுக்கு இலக்கான சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது, மந்திரவாதியிடம் பெற்றோர் அழைத்துச் சென்றதால் அச்சிறுவன் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். இந்தியா, உத்தர பிரதேசத்திலேயே இப்பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு தீண்டியுள்ளது. அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது, பெற்றோர் மந்திரவாதியை நாடியுள்ளனர். குறித்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் […]

உலகம் செய்தி

“நேட்டோவுக்கான நிதி கடலில் போடும் பணம்:” ட்ரம்ப் கடுப்பு!

  • April 13, 2026
  • 0 Comments

நேட்டோ NATO அமைப்புக்காக அமெரிக்கா டிரில்லியன் கணக்கிலான டொலர்களை செலவிடுவது தேவையற்றது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ நாடுகளின் உதவியை ட்ரம்ப் கோரி இருந்தார். எனினும், அந்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் நிராகரித்தன. இதனையடுத்து நேட்டோமீது ட்ரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நோட்டோ அமைப்பு காகித புலி என்றுகூட முத்திரை குத்தி இருந்தார். எனவே, நேட்டோவுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இனி தீவிரமாகப் பரிசீலிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதன் […]

இலங்கை செய்தி

“கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள்”

  • April 13, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் கடற்படையின் இரு போர்க்கப்பல்கள் நேற்று (13) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. நல்லெண்ணப் பயணமாகவே பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS Taimur’ மற்றும் ‘PNS Aslat’ ஆகிய போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன. பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களுக்கு இலங்கைகடற்படையால் சம்பிரதாயப்பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது. கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படையுடன் இணைந்து பாகிஸ்தான் கற்படை பயிற்சியில் ஈடுபடவுள்ளது என தெரியவருகின்றது. இந்தப் பயிற்சி இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தி, கடல்சார் உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் செய்தி

போரை எதிர்த்த Pope Leo XIVமீது ட்ரம்ப் விமர்சனக்கணை தொடுப்பு!

  • April 13, 2026
  • 0 Comments

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தையை Pope Leo XIV, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். திருத்தந்தை, சர்வதேச உறவுகளில் மிகவும் பலவீனமாகச் செயல்படுகின்றார் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவானவர் எனவும் முத்திரை குத்தியுள்ளார். திருத்தந்தையின் கருத்துகள் தார்மீக அடிப்படையில் அமைந்திருந்தாலும், டிரம்ப் அதனைத் தனது வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானதாகவே கருதி வருகின்றார். திருத்தந்தை அமெரிக்கர் என்றபோதிலும், டிரம்பின் ராணுவ நடவடிக்கைகளை அவர் எதிர்த்து […]

இலங்கை

யாழ் – தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை

  • April 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் நேற்று (13) இரவு இரு இளைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குடும்ப தகறாரு காரணமான ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

“ஈரான் அணு ஆயுதத்தை விரும்புவதாலேயே பேச்சு தோல்வி”

  • April 13, 2026
  • 0 Comments

அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு ஈரான் முற்படுகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump குற்றஞ்சாட்டியுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுத நோக்கத்தின் காரணமாகவே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என சுட்டிக்காட்டியுள்ள ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதற்கு இடமளிக்கபோவதில்லை எனவும் அறிவித்துள்ளார். எனினும், ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக நெருக்கமான சூழல் இருந்ததாகவும், அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகளே தடையாக இருந்ததாகவும் ஈரான் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை முற்றுகை: ஆஸ்திரேலியா போர்க்கொடி!

  • April 13, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை முற்றுகையில் இணையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது நாட்டிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese தெரிவித்தார். மேற்படி நடவடிக்கையில் ஆஸ்திரேலியா நேரடியாக பங்கேற்காது எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் மீண்டும் கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை, ஹார்முஸ் நீரிணை முற்றுகை தொடர்பான ட்ரம்பின் அறிவிப்புக்கு […]

விளையாட்டு

5ஆவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்யுமா ராஜஸ்தான்?

  • April 13, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (13) நடைபெறும் 21 லீக் ஆட்டத்தில் Rajasthan Royals மற்றும் Sunrisers Hyderabad ஆகிய அணிகள் மோதுகின்றன. Hyderabad ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் Rajiv Gandhi International Stadium இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். Hyderabad அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் 65 ஓட்டங்கள் வித்தியா சத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அதன் பிறகு 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடமும், […]