கடும் வறட்சி: இலங்கையில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிதவிப்பு
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 12,047 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,394 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 41,360 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 6,842 பேரும், பதுளை மாவட்டத்தில் 20,418 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரத்தில் பேரும் 151, இரத்தினபுரியில் 1,374 […]













