இலங்கை செய்தி

புலிகளுக்கே அஞ்சாத மஹிந்தவின் மகன்தான் நாமல்: அநுர அரசுக்கு அஞ்சுவாரா என்ன?

“சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருந்த பிரபாகரனுக்கே அஞ்சாத மஹிந்த ராஜபக்சவின் மகன்தான் நாமல் ராஜபக்ச. அவர் இந்த அநுர அரசாங்கத்திற்கு அஞ்சுவாரா என்ன?”

“சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருந்த பிரபாகரனுக்கே அஞ்சாத மஹிந்த ராஜபக்சவின் மகன்தான் நாமல் ராஜபக்ச. அவர் இந்த அநுர அரசாங்கத்திற்கு அஞ்சுவாரா என்ன?” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான இந்திக அனுருத்த கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“இந்த அரசாங்கம் தவறான இடத்தில் கை வைத்துவிட்டது. சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருந்த பிரபாகரனையே மஹிந்த ராஜபக்ச பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அதனால்தான் போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் எனச் சூளுரைத்து, போரையும் முடித்துக் காட்டினார்.

இப்படிப்பட்டவரின் மகன்தான் நாமல் ராஜபக்ச. அவருக்கு இந்த அநுர அரசாங்கம் ஒரு பொருட்டே இல்லை. நாமலின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திவிட்டுதான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியே இறங்கினார். இதில் இருந்தே நாமலின் பலம் என்னவென்று புரிகிறது.

நாட்டு மக்கள் ராஜபக்சக்களை மீண்டும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்; ராஜபக்சக்கள் முன்னெடுத்த அரசியலைத் தேடுகின்றனர். நாம் அரசியல் வியாபாரம் செய்யவில்லை; மக்களுக்குத் தேவையான அரசியலையே முன்னெடுத்தோம்.” – என்றார் இந்திக அனுருத்த.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை