4 விமானங்களில் 68 தொன் நிவாரண பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா, இதுவரை 4 விமானங்களில் 68.5 தொன் நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது.
கடந்த 26-ம் திகதி நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அன்றைய தினமே இந்திய விமானப் படையின் சி-130ஜே ரக சரக்கு விமானம் மூலம் நேபாளத்துக்கு 10 தொன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன.
கடந்த 27-ம் திகதி இந்திய விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் 37.5 தொன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த 28-ம் திகதி சி-130ஜே விமானம் மூலம் 10 டன் நிவாரணப் பொருட்கள் நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 29-ம் திகதி இந்திய விமானப் படையின் சரக்கு விமானம் மூலம் மேலும் 11 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 4 விமானங்களில் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அந்த நாட்டுக்கு இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது. இதில் போர்வைகள், தார்பாலின் கூடாரங்கள், தூங்குவதற்கான சிறப்பு படுக்கைகள் ஆகியவையும் அடங்கும்.
மேலும் நேபாளம் முழுவதும் பெருவெள்ளத்தால் 40-க்கும் மேற்பட்ட பிரதான பாலங்கள் சேதமடைந்துள்ளன. அங்கு தற்காலிக பாலங்களை அமைக்க இந்தியாவின் உதவியை நேபாள அரசு கோரி உள்ளது.
முதல்கட்டமாக 16 லாரிகளில் தற்காலிக இரும்பு பாலங்கள் அமைப்பதற்கான உபகரணங்கள், பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.




