உலகம் முக்கிய செய்திகள்

ஈரான் போரில் போர் குற்றம் இழைத்த அமெரிக்கா – ஐ.நாவில் அறிக்கை சமர்ப்பிக்க தீர்மானம்

  • September 17, 2026
  • 0 Comments

ஈரானில் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களின்போது அமெரிக்க படைகள் போர் குற்றம் இழைத்ததாக ஐ.நாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விரு தாக்குதல்களிலும் சுமார் 120 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கப் படைகள் போர்க்குற்றங்களை இழைத்திருக்கக்கூடும் என்று ஐ.நா.வின் உண்மை கண்டறியும் குழு ஒன்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. லாமெர்ட் (Lamerd) நகரில் உள்ள விளையாட்டு மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது அமெரிக்கத் தாக்குதல் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா. அறிக்கை கண்டறிந்துள்ளது. இருப்பினும், அந்நகரில் தாக்குதல்கள் எதையும் நடத்தவில்லை […]

உலகம் செய்தி

ஈரானுடனான போர் – அமெரிக்காவிற்கு 38 பில்லியன் செலவு

  • September 16, 2026
  • 0 Comments

ஈரானுடனான போருக்காக அமெரிக்க ராணுவம் சுமார் 38 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளதாக, கட்சி சார்பற்ற ‘காங்கிரஷனல் பட்ஜெட் அலுவலகம்’ (CBO) தெரிவித்துள்ளது. மோதல் நீடிக்கும் ஒவ்வொரு மாதமும் இதனுடன் மேலும் பல பில்லியன் செலவுகள் சேரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்ந்தால், வன்முறையின் தீவிரத்தைப் பொறுத்து, மாதத்திற்கு 2 முதல் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கும் அதிகமான செலவு ஏற்படலாம் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது. போரில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் […]

உலகம்

வளைகுடாவில் புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தை நிறுவும் ஈரான்

  • September 7, 2026
  • 0 Comments

எதிர்வரும் நாட்களில் வளைகுடாவில் ஒரு புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தையும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக  புதிய கப்பல் வழித்தடத்திற்கான வரைபடங்களையும் அறிவிக்கப்போவதாக ஈரான் கூறியுள்ளது. புதிய கட்டுப்பாட்டு மண்டலம், ஈரான் மீதான அமெரிக்கத் தடை தொடங்கும் இடத்திலிருந்து தொடங்கி வளைகுடாவின் பிற பகுதிகளுக்கும் விரிவடையும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி Mohsen Rezaei , நேற்று இந்த தகவலை வெளியிட்டார். இந்தத் திட்டம் குறித்த விவரங்கள் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் […]

கருத்து & பகுப்பாய்வு

போரில் திருப்பம் – ஈரானுக்கு கைக்கொடுக்கும் ரஷ்யா, வலுவடையும் இராணுவ உறவு

  • September 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய அளவுக்கு வேகமான, சக்திவாய்ந்த புதிய வகை குரூஸ் ஏவுகணையை உருவாக்குவதில் ரஷ்யா ஈரானுக்கு ரகசியமாக உதவி வருவதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக பிரசூரித்துள்ளது. ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள குறித்த செய்தியில், C430L என அறியப்படும் ஒரு ரகசிய திட்டம் நீண்டகாலமாக பரிசீலிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை உருவாக்க ரஷ்யா ஈரானுக்கு ரகசியமாக […]

உலகம்

ஒரேஒரு புகைப்படம் – ஈரானில் பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு

  • August 30, 2026
  • 0 Comments

ஈரானில் ஜனவரி மாதம் நடந்த போராட்டங்களின் போது, ​​தீப்பற்றி எரிந்த ஒரு கடையைப் புகைப்படம் எடுத்ததமைக்காக பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது ‘கடவுளுக்கு எதிராகப் போர் தொடுத்தல்’ என்று தோராயமாக மொழிபெயர்க்கப்படும் ‘மொஹாரெபே’ என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லைலா அபோல்ஹசானி  Leila Abolhasani  என்ற 43 வயதுடைய தாய் ஒருவரே  இவ்வாறு மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். கடந்த ஏழு மாதங்களாக தீவைப்பு குற்றச்சாட்டின் கீழ் அவர் சிறை தண்டனை […]

உலகம்

பொருளாதாரத் தடை – எண்ணெய் ஏற்றுமதியை தடுப்போம் என ஈரான் சபதம்

  • August 24, 2026
  • 0 Comments

ஈரானின் வர்த்தகப் பங்காளிகளை இலக்காகக் கொண்டு மாபெரும் பொருளாதார தடையை இன்று முதல் அமுல்படுத்தவுள்ளதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. இந்நிலையில் பொருளாதாரப் போர் தொடர்ந்தால்” வளைகுடாவிலிருந்து அனைத்து எண்ணெய் ஏற்றுமதியையும் நிறுத்திவிடுவோம் என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரான் மீது அதிகளவிலான பொருளாதாரத் தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த கூடுதல் பொருளாதாரத் தடை அந்நாட்டை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே போரிடும் நாடுகள் பல வாரங்களாக ஒன்றுக்கொன்று […]

ஐரோப்பா

பிரெஞ்சு தூதரகத்தின் இரு ஊழியர்கள் ஈரானுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு

  • August 17, 2026
  • 0 Comments

பிரெஞ்சு தூதரகத்தின் இரு ஊழியர்கள் ஈரானுக்குள் மீளவும் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தூதரகங்களின் விதிகள் மற்றும் சலுகைகளை வரையறுக்கும் வியன்னா உடன்படிக்கையை மீறி, ஈரானிய குடிமைச் சமூகத்திற்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் விளக்கமளித்துள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி Esmaeil Baghaei இன்று இதனை அறிவித்துள்ளார். மேற்கத்தேய நாடுகள் தனது உள்விவகாரங்களில் தலையிடுவதாக ஈரான் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறது. இதற்கிடையே பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் […]

உலகம்

ஈரான் எந்த வகையிலும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது – ட்ரம்ப் எச்சரிக்கை

  • August 17, 2026
  • 0 Comments

ஈரான் எந்த வகையிலும் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்கப்படக்கூடாது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல்’ தளத்தில் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்திடப்பட்ட 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம், நிரந்தர அமைதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாமல் அதன் காலாவதி திகதியை எட்டியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான முற்றுகையைக் கையாள்வதோடு, ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதை அசல் […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஒருவழியாக உடன்பாட்டிற்கு வந்த ஈரான் – ஓமான்

  • August 16, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்திக்கான கப்பல் வழித்தட வரைபடம் குறித்து ஈரான் ஓமானுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தடைகள் இருந்தபோதிலும்” கடந்த மூன்று வாரங்களாகப் பேச்சுவார்த்தைகள் சாதகமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் எஞ்சிய பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஏற்பாடு, இரு நாடுகளின் இறையாண்மையைப் […]

உலகம் முக்கிய செய்திகள்

ஊடக சுதந்திரத்தை முடக்குகிறதா ஈரான்? நேர்காணல்கள் வழங்க கட்டுப்பாடு

  • August 16, 2026
  • 0 Comments

இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரானதாகக் கருதப்படும் அமெரிக்க அல்லது இஸ்ரேலிய ஊடகங்கள் உள்ளிட்ட “விரோத” ஊடக நிறுவனங்களுடன் நேர்காணல்கள் மற்றும் பிற தகவல்தொடர்புகளை மேற்கொள்வதைக் குற்றமாக்கும் சட்டமூலத்திற்கு ஈரானிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமூலம் சட்டமாவதற்கு முன்பு, அரசியலமைப்புப் பாதுகாப்புக் குழுவால் மேலும் ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ், விரோத ஊடகங்களுடனான உறவுகளுக்குத் தடை – அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது அதுபோன்ற நாடுகளால் ஆதரிக்கப்படும் ஊடக நிறுவனங்களுடன் நேர்காணல்களை நடத்துவது அல்லது கலந்துரையாடல்களில் […]