நீதித்துறை தொடர்பான அரசின் முடிவுக்கு சட்டத்தரணிகள் சங்கம் போர்க்கொடி
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு விழுந்த அடியாகும்; இதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைப்பின் அனைத்து […]













