கென்யாவில் மரணவீட்டிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் – 24 பேர் உயிரிழப்பு
கென்யாவில் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்த ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்துப் பொதுப் போக்குவரத்து சேவைகளும் ஆய்வு செய்யப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.




