வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது. இலங்கை செய்தி

சீன முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

  • August 11, 2026
  • 0 Comments

வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது, முக்கியமாக கொழும்பு துறைமுக நகரத்தை (Port City) மையமாகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதியின் தொலைநோக்குத் திட்டங்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் பிரதான காரணியாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய வரையறுக்கப்பட்ட […]

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணியில் இன்று 15 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 11, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 49 வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 15 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 05 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவை என சந்தேகிக்கப்படுகின்றது. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 11மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் […]

உலகம் செய்தி

மேற்குக்கரையில் வீடுகள் இடிப்பு: இஸ்ரேலுக்கு ஹமாஸ் கடும் கண்டனம்

  • August 11, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் (West Bank) பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஹமாஸ் அமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி அப்துல் ரஹ்மான் ஷதீத் (Abdul Rahman Shadid) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலின் இந்த வீடு இடிப்பு நடவடிக்கை, பாலஸ்தீனிய மக்கள் தங்கள் சொந்த நிலத்தைப் பாதுகாப்பதிலிருந்தும், குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் மற்றும் பாசிச ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதிலிருந்தும் அவர்களை ஒருபோதும் பின்வாங்கச் செய்யாது” என்று குறிப்பிட்டுள்ளார். நாப்ளஸ் (Nablus) நகருக்கு […]

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளது. செய்தி

எபோலா வைரஸ்: கொங்கோவில் 2000 இற்கு மேற்பட்டோர் பலி

  • August 11, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, வைரஸ் மிக அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் குறைந்தது 1,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை வரையிலான தகவல்களின்படி, கொங்கோவின் ஐந்து மாகாணங்களில் மொத்தம் 4,381 எபோலா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 2,011 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆபிரிக்க நாட்டில் […]

இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைந்த அபிவிருத்திக்கு 100 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

  • August 11, 2026
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி 2026 – 2031 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2026.02.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் […]

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதிக்கு மரண தண்டனை உலகம் செய்தி

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை

  • August 11, 2026
  • 0 Comments

சிரியாவில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் (Bashar al-Assad), அவரது சகோதரர் மஹர் அல்-அசாத் மற்றும் உறவினரான அதேப் நஜீப் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. டமாஸ்கஸில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வழங்கிய இந்தத் தீர்ப்பில், 2024 டிசம்பரில் பதவி கவிழ்க்கப்பட்டு தற்போது ரஷ்யாவில் அகதியாக வாழும் பஷார் அல்-அசாத்திற்கு எதிராக திட்டமிட்ட கொலை, சித்திரவதை மற்றும் மனிதகுலத்திற்கு […]

செய்தி விளையாட்டு

2027 உலகக்கிண்ணம்: இங்கிலாந்து உட்பட 8 அணிகள் நேரடித் தகுதி

  • August 11, 2026
  • 0 Comments

ICC 14-வது ODI கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஒக்​டோபர் 4 முதல் நவம்பர் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, நமீபியா ஆகிய 3 நாடு​கள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்த உள்​ளன. தென் ஆப்​பிரிக்​கா​வில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு​நாள் போட்டி உலகக் கோப்பை தொடர் நடை​பெற உள்​ளன. இந்த தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்தத் தொடரில் சில மாற்றங்களை […]

பொதுத்தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், தனது தலைமைத்துவத்தை மாற்றுவது தொடர்பான ஊகங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில், தேசியக் கட்சியின் (National Party) நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பிற்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) அழைப்பு விடுத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அரசியல் நெருக்கடியில் நியூசிலாந்து பிரதமர்: ஆட்சி பறிபோகும் அபாயம்

  • August 11, 2026
  • 0 Comments

பொதுத்தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், தனது தலைமைத்துவத்தை மாற்றுவது தொடர்பான ஊகங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில், தேசியக் கட்சியின் (National Party) நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பிற்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) அழைப்பு விடுத்துள்ளார். “பல்வேறு ஊடக அறிக்கைகள் மற்றும் உரையாடல்கள் மூலம் எனது தலைமைத்துவம் குறித்து அதிக ஊகங்கள் எழுந்துள்ளமை தெளிவாகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய பிளவுகள் பெரும் கவனச்சிதறலை ஏற்படுத்தும். எனவே, பிரச்சினைக்கு விரைவில் […]

ஆஸ்திரேலியா மத்திய வங்கி (RBA) தனது உத்தியோகபூர்வ வட்டி வீதத்தில் (Cash Rate) மாற்ற எதுவும் செய்யாமல், அதனைத் தொடர்ந்து 4.35 சதவீதமாகவே பேண தீர்மானித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் சரிவு

  • August 11, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மத்திய வங்கி (RBA) தனது உத்தியோகபூர்வ வட்டி வீதத்தில் (Cash Rate) மாற்ற எதுவும் செய்யாமல், அதனைத் தொடர்ந்து 4.35 சதவீதமாகவே பேண தீர்மானித்துள்ளது. ஜூன் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் சற்றுச் சரிவைக் கண்டமை மற்றும் சொத்து விலைகளில் ஏற்பட்ட மிதமான வீழ்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவுள்ள மத்திய வங்கியின் அடுத்த கூட்டங்கள் வரை இந்த வட்டி வீதமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள […]

அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.  அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் எதிர்க்கவில்லை: நீதி அமைச்சர் விளக்கம்

  • August 11, 2026
  • 0 Comments

அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.  அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் எவ்வாறு எதிரணியை ஒடுக்கும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினால், அதற்குரிய பதிலை வழங்க முடியும். அவ்வாறு இல்லாமல் வேண்டுமென்றே விமர்சிப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், “இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் ஒரு சுயாதீன அமைப்பாகும். […]