மகாராஷ்டிர மாநிலம் தானே நகரிலுள்ள கோப்ரி (Kopri) காவல் நிலையத்திற்குள்ளேயே, ஆளுங்கட்சியான சிவசேனாவின் இளைஞரணித் தலைவரான சித்தேஷ் அபங்கே (Siddhesh Abhange) தாக்குதலுக்குள்ளான சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்தி

காவல் நிலையத்துக்குள் சிவசேனா இளைஞரணித் தலைவர்மீது தாக்குதல்

  • September 29, 2026
  • 0 Comments

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரிலுள்ள கோப்ரி (Kopri) காவல் நிலையத்திற்குள்ளேயே, ஆளுங்கட்சியான சிவசேனாவின் இளைஞரணித் தலைவரான சித்தேஷ் அபங்கே (Siddhesh Abhange) தாக்குதலுக்குள்ளான சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணப் பிரச்சினை தொடர்பாக சித்தேஷ் அபங்கேவிற்கும், ஜவுளித் தொழில் செய்து வரும் சில பெண் தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்காக இரு தரப்பினரும் திங்கள்கிழமை இரவு கோப்ரி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, காவல் […]

உத்தரப் பிரதேசப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான திவ்யா மிட்டல், தனது நிர்வாகப் பணியில் இருந்து விலகிய சில நாட்களிலேயே அரசியலில் களமிறங்குவதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்தியா செய்தி

அரசியல் களத்தில் குதித்தார் முன்னாள் IAS அதிகாரியான திவ்யா மிட்டல்

  • September 29, 2026
  • 0 Comments

உத்தரப் பிரதேசப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான திவ்யா மிட்டல், தனது நிர்வாகப் பணியில் இருந்து விலகிய சில நாட்களிலேயே அரசியலில் களமிறங்குவதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இருப்பினும், எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என்றும், மக்களுடன் இணைந்து சுயேச்சையான அரசியல் பயணத்தைத் தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் பேசிய அவர், “சில நாட்களுக்கு முன்பு நான் ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தேன். ‘அடுத்து என்ன, யாருடன், எங்கிருந்து?’ என்ற கேள்விகளுக்குப் […]

இந்தியாவின் முக்கிய 178 அணைகளில் உள்ள நீர் இருப்பு, அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 70 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரி நீர் இருப்பை விடக் குறைவாகும். இந்தியா செய்தி

எல் நினோ தாக்கம்: இந்தியாவில் 178 அணைகளில் நீர்மட்டம் சரிவு

  • September 29, 2026
  • 0 Comments

இந்தியாவின் முக்கிய 178 அணைகளில் உள்ள நீர் இருப்பு, அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 70 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரி நீர் இருப்பை விடக் குறைவாகும். நடப்பு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை), வழக்கத்தை விட 12 சதவீதம் குறைவான மழையே பதிவாகியுள்ளது. குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில் உருவான ‘எல் நினோ’ காரணியின் வலுவான தாக்கத்தால், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் […]

ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்குப் பதிலாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதாகவும் முடக்கப்பட்ட நிதியை விடுவிப்பதாகவும் தான் உறுதியளித்ததாக வெளியான செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை மறுத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீதான தடைகளை நீக்க இணங்கினாரா ட்ரம்ப்?

  • September 29, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்குப் பதிலாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதாகவும் முடக்கப்பட்ட நிதியை விடுவிப்பதாகவும் தான் உறுதியளித்ததாக வெளியான செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை மறுத்துள்ளார். “இது முற்றிலும் உண்மையற்றது. நான் அவர்களுக்கு எதையும் வழங்க முன்வரவில்லை” என்று ‘ஆக்ஸியோஸ்’ (Axios) செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டம் […]

சதுரங்க விளையாட்டில் மிக இளைய வயதில் woman grandmaster (WGM) பட்டம் வென்ற உலகின் முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை பிரித்தானியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி போதனா சிவானந்தன் படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

11 வயதில் grandmaster பட்டம் வென்று பிரித்தானிய சிறுமி போதனா சிவானந்தன் சாதனை

  • September 29, 2026
  • 0 Comments

சதுரங்க விளையாட்டில் மிக இளைய வயதில் woman grandmaster (WGM) பட்டம் வென்ற உலகின் முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை பிரித்தானியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி போதனா சிவானந்தன் படைத்துள்ளார். வடமேற்கு லண்டனைச் சேர்ந்த போதனா சிவானந்தன், உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரித்தானியா சார்பில் பங்கேற்று விளையாடினார். இதில் தனது மூன்றாவது மற்றும் இறுதி ‘டபிள்யூ.ஜி.எம் நாரம்’ (WGM norm) தகுதியை அவர் எட்டியதை சர்வதேச சதுரங்கக் […]

பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் முயற்சிக்கு பின்னணியில், வெளிநாட்டின் சார்பில் செயல்பட்ட நபர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

RAF Fairford சம்பவம் வெளிநாட்டு சதியா?

  • September 29, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் முயற்சிக்கு பின்னணியில், வெளிநாட்டின் சார்பில் செயல்பட்ட நபர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. லண்டனைச் சேர்ந்த 20 வயதுடைய இந்த ஐந்து பிரிட்டிஷ் குடிமக்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் அமெரிக்கப் போர் விமானங்களைக் கொண்ட RAF Fairford தளம் நோக்கி மூன்று வெள்ளை நிற வேன்கள் சென்றதை உள்ளூர் […]

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் மற்றும் நீதிச் சேவைச் சட்டம் ஆகியவை முற்றிலும் ஜனநாயக ரீதியாகவும் அரசமைப்புக்கு அமைவாகவுமே நிறைவேற்றப்பட்டன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

ஜனநாயகத்தின் பிரகாரமே “22” நிறைவேற்றம்

  • September 29, 2026
  • 0 Comments

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் மற்றும் நீதிச் சேவைச் சட்டம் ஆகியவை முற்றிலும் ஜனநாயக ரீதியாகவும் அரசமைப்புக்கு அமைவாகவுமே நிறைவேற்றப்பட்டன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- “சட்டமூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதற்குரிய கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், உயர்நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கு அமையவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விவாதத்தின் பின்னர் தேவையான […]

வடக்கில் பௌத்த தலங்கள் இந்து மயப்படுத்தப்பட்டுவருவதாகவும், திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் பாடசாலை மாணவர்களும் பங்கேற்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

இந்து மயமாகிறது வடக்கு: பதறுகிறார் விமல்

  • September 29, 2026
  • 0 Comments

வடக்கில் பௌத்த தலங்கள் இந்து மயப்படுத்தப்பட்டுவருவதாகவும், திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் பாடசாலை மாணவர்களும் பங்கேற்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு “வடக்கில் பௌத்த தலங்கள் இந்து மயமாக்கப்பட்டுவருகின்றது. தேவநம்பிய திஸ்ஸ நிர்மாணித்த யாழ். திஸ்ஸ விகாரைக்குகூட இன்று சிங்கள மக்களால் செல்ல முடியாதுள்ளது. திலீபனுக்கு நினைவேந்தல் நடத்துவதற்கு இடமளித்துவிட்டு, கடைசி நாளில் சென்று சிலையை பொலிஸார் அகற்றுகின்றனர். அதனை பாதுகாப்பாக வைத்து, […]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், 200 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ குற்றவாளிகள் தனித்தனி அறைகளில் அடைப்பு

  • September 29, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், 200 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நடத்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 269 பேர் கொல்லப்பட்ட , 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பைத் தொடர்ந்து, தண்டனை பெற்றவர்கள், தண்டனையை அனுபவிப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தனித்தனி அறைகளில் அடைத்து வைப்பதற்கான […]

இலங்கைக்கு 3 தொன்னுக்கும் அதிகமான காசநோய் எதிர்ப்பு மருந்துப் பொருள்களுடன் சிறப்பு விமானம் ஒன்றை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்தியா இலங்கை செய்தி

இலங்கைக்கு தொடர்ந்து நேசக்கரம் நீட்டும் இந்தியா

  • September 29, 2026
  • 0 Comments

இலங்கைக்கு 3 தொன்னுக்கும் அதிகமான காசநோய் எதிர்ப்பு மருந்துப் பொருள்களுடன் சிறப்பு விமானம் ஒன்றை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய விமானப்படையின் C-130J விமானம், 3 தொன்னுக்கும் அதிகமான காசநோய் எதிர்ப்பு மருந்துகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளதாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொது சுகாதார முறைமைக்கு ஆதரவளிப்பதில் இந்திய உறுதியாக இருப்பதாகவும் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.