இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர்
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (FCID) தனியார் வங்கிகளுக்குச் சென்று நேரடியாகவே சென்று இந்த அதிரடிப் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறானதொரு நிதியியல் குற்றச்சாட்டின் கீழ் வங்கி முகாமையாளர்கள்கைது செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளில் வெளியான அதிர்ச்சித் […]













