யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில், இருந்து நேற்று 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில், இருந்து நேற்று 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 54 வது நாளான நேற்று 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 09 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 108 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 572 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் இன்று (18) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. செய்தி

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ’22’ ஆவது திருத்தச்சட்டமூலம் சமர்ப்பிப்பு

  • August 18, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் இன்று (18) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது, இவ்விரு சட்டமூலங்களும் முதலாம் வாசிப்புக்காக நீதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்விரு சட்டமூலங்களுக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், இந்த முன்மொழிவுகளை உடனடியாகக் கைவிடுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியிலேயே இச்சட்டமூலங்கள் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. […]

உக்ரைன் மீதான போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும், 'யாப்லோகோ' (Yabloko) கட்சியின் துணைத் தலைவருமான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு (Lev Shlosberg) 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலகம் செய்தி

போரை எதிர்த்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை

  • August 17, 2026
  • 0 Comments

உக்ரைன் மீதான போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும், ‘யாப்லோகோ’ (Yabloko) கட்சியின் துணைத் தலைவருமான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு (Lev Shlosberg) 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பியமை மற்றும் இழிவுபடுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், பிஸ்கோவ் (Pskov) நகரில் உள்ள நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது. போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஓமான்மீது தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

  • August 17, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஓமான் இடையூறாக இருந்தால், அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். பொக்ஸ் நியூஸ் (Fox News) அலைவரிசைக்குத் திங்கள்கிழமை அளித்த நேர்காணலின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஓமான் குறுக்கே நின்றால், அவர்கள் மீது மிகக் கடுமையான குண்டுவீச்சு நடத்துவோம்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே நீண்டகாலமாக ராஜதந்திர தூதராகவும் உத்திபூர்வ பங்காளியாகவும் […]

இலங்கை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது 350-வது விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

350 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை

  • August 17, 2026
  • 0 Comments

இலங்கை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது 350-வது விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கை அணியின் கேசர நுவந்துவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 37 வயதான ஜடேஜா, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளையும் தனது வசமாக்கியுள்ளார். முதல் இந்திய இடதுகை பந்துவீச்சாளர் டெஸ்ட் கிரிக்கெட் […]

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (17.08.2026) திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

யாழில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: ஆளுநர் தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

  • August 17, 2026
  • 0 Comments

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (17.08.2026) திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் இவ்வாண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பிலும், அதனுடன் இணைந்த ஏற்பாடுகள் […]

தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைத்து தேசிய மையமொன்றை நிறுவுவதன் மூலம், அந்தப் பணிகளின் செயல்திறனையும் பயனுள்ள தன்மையையும் அதிகரிப்பதன் ஊடாக எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். இலங்கை செய்தி

பாதுகாப்பு படைகளுக்கு நவீன தொழில்நுட்பம்: ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

  • August 17, 2026
  • 0 Comments

தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைத்து தேசிய மையமொன்றை நிறுவுவதன் மூலம், அந்தப் பணிகளின் செயல்திறனையும் பயனுள்ள தன்மையையும் அதிகரிப்பதன் ஊடாக எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைச்சு தொடர்பான 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தேசிய […]

தைவான் தன் தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்த உறுதியுடன் இருப்பதாகவும், அமைதியை நிலநாட்டுவதற்கான முதலீடாக எதிர்வரும் 2027-ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்புப் வரவு செலவுத் திட்டம் சாதனை அளவில் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-தே (Lai Ching-te) திங்கள்கிழமை அறிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீன அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க 1.12 டிரில்லியன் டொலர் பாதுகாப்பு பட்ஜெட்: தைவான் முடிவு

  • August 17, 2026
  • 0 Comments

தைவான் தன் தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்த உறுதியுடன் இருப்பதாகவும், அமைதியை நிலநாட்டுவதற்கான முதலீடாக எதிர்வரும் 2027-ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்புப் வரவு செலவுத் திட்டம் சாதனை அளவில் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-தே (Lai Ching-te) திங்கள்கிழமை அறிவித்துள்ளார். தைவான் அமைச்சரவை தனது அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாதுகாப்புச் செலவினம் தொடர்பான முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன. சாதனைப் வரவு செலவு திட்டம் 2027-ஆம் ஆண்டிற்கான தைவானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பட்ஜெட் […]

இலங்கை செய்தி

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

  • August 17, 2026
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று பக்திபூர்வமாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.  

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர் இலங்கை செய்தி

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர்

  • August 17, 2026
  • 0 Comments

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (FCID) தனியார் வங்கிகளுக்குச் சென்று நேரடியாகவே சென்று இந்த அதிரடிப் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறானதொரு நிதியியல் குற்றச்சாட்டின் கீழ் வங்கி முகாமையாளர்கள்கைது செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளில் வெளியான அதிர்ச்சித் […]