ட்ரம்பின் சலுகையை நிராகரித்த வடகொரியா: ஏவுகணைகளைச் சோதித்து அதிரடி
வடகொரியாவிற்கு இணக்கமான போக்கை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் தங்களின் வருடாந்திரக் கூட்டுப் பயிற்சியை திட்டமிட்ட நாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்பாகவே வெள்ளிக்கிழமை நிறைவு செய்துள்ளன. இருப்பினும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு இந்நடவடிக்கை போதுமானதாக இல்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. முன்னதாக, Ulchi Freedom Shield என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்குவதற்கு சற்று முன்பாக, பயிற்சியின் அளவை “குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான […]













