இலங்கை செய்தி

சவூதி சிறையில் அனோஜனுக்கு நடந்தது என்ன?

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர் கொண்டுள்ள சிவராஜா அனோஜன் தொடர்பில் அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக இலங்கை சட்டக்குழுவொன்று சவூதி சென்றுள்ளதாகவும், இன்று  மேன்முறையீடு செய்யப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர் கொண்டுள்ள சிவராஜா அனோஜன் தொடர்பில் அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக இலங்கை சட்டக்குழுவொன்று சவூதி சென்றுள்ளதாகவும், இன்று  மேன்முறையீடு செய்யப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் அனோஜன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும், அவர் வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“மேல்முறையீட்டைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஒக்டோபர் 17 வரை உள்ளது. சவூதி சட்ட நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, வழக்குப் பதிவைச் சட்டக் குழு இன்று அல்லது நாளை தாக்கல் செய்யும்.

நீதிமன்ற நடைமுறைகள் முடிவடைந்த பின்னரே, அனோஜனின் தண்டனையைக் குறைக்கக் கோரும் அல்லது கருணை மனு தொடர்பான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.
சிறையில் அனோஜன் தாக்கப்பட்டார் என தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஒக்டோபர் 6 அன்று சிறைக்குச் சென்று, சிறைத்துறைத் தலைவர் மற்றும் சிறை மருத்துவரைச் சந்தித்தனர்.

சவூதி சிறைத்துறை அதிகாரிகள் தூதரகத்திற்கு அளித்த தகவலின்படி, அனோஜனுக்கும் அவருடன் ஒரே அறையிலிருந்த மற்றொரு கைதிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியுள்ளது.

இந்த மோதலின் போது அனோஜனின் முகத்தில் நகக்காயங்களும் கீறல்களும் மட்டுமே ஏற்பட்டதாகவும், கத்தி, கூர்மையான ஆயுதங்கள் அல்லது வேறு எந்த ஆயுதங்களும் பயன்படுத்தப்படவில்லை என்றும் சிறைத்துறை அதிகாரிகளும் மருத்துவரும் இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த விஜயத்தின் போது இலங்கைத் தூதரக அதிகாரிகள் அனோஜனை நேரில் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அவரது காயங்கள் தொடர்பான தகவல்கள் சவூதி அதிகாரிகளால் மட்டுமே வழங்கப்பட்டது.

தற்போது அனோஜனின் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவரது பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளனர். மேலும், அனோஜன் வேறு சிறை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.” – என்றார் அமைச்சார்.

அனோஜன் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவரது குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஹேரத், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

இலங்கை அரசு அவருக்காகச் சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், சவூதி அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக வழங்கும் தகவல்களையே நம்பியிருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

சவூதி அரேபியாவின் சட்ட மற்றும் நீதித்துறை சட்டமைப்பிற்கு உட்பட்டு, அனோஜனுக்கு நிவாரணம் பெற சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் உறுதியுடன் உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை