செய்தி பொழுதுபோக்கு

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் தனது 75 ஆவது காலமானார்.

இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் தனது 75 ஆவது காலமானார்.

அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவின் டோனா பவுலா பகுதியில் அமைந்திருந்த தனது இல்லத்தில் நானா படேகர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை சிபிஆர் சிகிச்சை அளித்து தீவிரமாக முயற்சி செய்த போதிலும், சிகிச்சை பலனின்றி அதிகாலை 5:20 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்தி மற்றும் மராத்தி திரையுலகில் பல தசாப்தங்களாக தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் நானா படேகர். ‘பரிந்தா’, ‘கிராந்திவீர்’, ‘அப் தக் சப்பன்ஹீ’, ‘பிரஹார்’, ‘அங்கார்’ மற்றும் ‘வெல்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது நடிப்பு கொண்டாடப்படுகிறது.

தமிழில் பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்திலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.

மூன்று தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ள நானா படேகருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கி கவுரவித்தது. இவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி