நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணி எம்.பிக்கள் கைச்சாத்து
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (08) ஆரம்பமானது.
நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எம்.பிக்களிடம் கையொப்பம் பெறஙப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிரணி எம்.பிக்கள் பலரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் இட்டனர்.
நாளை வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்படவுள்ளது.




