FIFA தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான FIFAவின் தலைவர் ஜியானி இன்பான்டினோவை (Gianni Infantino) பதவியிலிருந்து நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது. உலகக் கால்பந்தாட்டத்தின் முக்கிய பிராந்தியக் கூட்டமைப்புகள் இது பற்றி ஆராய்ந்துவருகின்றன என்று மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (UEFA), ஆசிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (AFC) , வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (CONCACAF) ஆகிய முக்கிய அமைப்புகளே இத்தகைய […]













