ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் உத்தரவு

  • September 4, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த விளக்கமறியல் உத்தரவை வழங்கினார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் சமர்ப்பணங்கள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை […]

இந்திய மத்திய அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும், அப்போது வயதில் மூத்தவர்கள் பொறுப்புகளைக் குறைந்து இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா செய்தி

இந்திய அமைச்சரவை நாளை மறுசீரமைப்பு? இளம் தலைமுறையை கவர வியூகம்!

  • September 4, 2026
  • 0 Comments

இந்திய மத்திய அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும், அப்போது வயதில் மூத்தவர்கள் பொறுப்புகளைக் குறைந்து இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டு வந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கம் முடிவுக்கு வருதாகத் தெரிகிறது. ஆகஸ்ட் 26-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர், “அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சந்திப்போம்” எனக் கூறியதாகத் தெரிகிறது. முன்னதாக, […]

பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக, 'ஊபர்' (Uber) நிறுவனத்தின் முன்னாள் ஓட்டுநருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பெண் பயணிக்கு பாலியல் தொல்லை: Uber சாரதியின் குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்தது ஆஸ்திரேலியா

  • September 4, 2026
  • 0 Comments

பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக, ‘ஊபர்’ (Uber) நிறுவனத்தின் முன்னாள் ஓட்டுநருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிராஸ்பெக்ட் (Prospect) பகுதியைச் சேர்ந்த முஹம்மது உஸைர் ஏசான் (35) Muhammad Uzair Ehsan என்பவருக்கு எதிராக, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, இரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நீதிபதி ரோட்ரிக் ஜென்சன் தீர்ப்பளித்திருந்தார். இன்று அடிலெய்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தண்டனை […]

இலங்கை செய்தி

நாமல் ராஜபக்ச கைது

  • September 4, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, லஞ்ச – ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய ‘ஏர்பஸ்’ (Airbus) விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று காலை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எழுத்துப்பூர்வமாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய இன்று (04) காலை ஆணைக்குழுவில் ஆஜரானார். சுமார் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் […]

27-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்மட்டக் கட்டளை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் மிக மூத்த இராணுவப் பதவியின் அதிகாரங்களை முதன்முறையாகச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் சட்டமூலத்துக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பிரதமருக்கு அடுத்தப்படியாக பாதுகாப்பு பிரதானி: பாகிஸ்தானில் அதிரடி சட்டம்

  • September 4, 2026
  • 0 Comments

27-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்மட்டக் கட்டளை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் மிக மூத்த இராணுவப் பதவியின் அதிகாரங்களை முதன்முறையாகச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் சட்டமூலத்துக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 20 அன்று, பாகிஸ்தான் தேசிய பேரவை ‘பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் சட்டம் 2026’ மற்றும் ‘தேசிய கட்டளை அதிகாரி சட்டம் 2010’-க்கான திருத்தம் ஆகியவற்றை அங்கீகரித்தது. இவ்விரு சட்டங்களும் இணைந்து, கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட […]

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார் இந்திய தூதுவர் இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார் இந்திய தூதுவர்

  • September 4, 2026
  • 0 Comments

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு, ஆசிகளைப் பெற்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்த மகாநாயக்க தேரர்களுக்கு மரியாதை செலுத்தியதாகவும், அவர்களின் ஆசிகளைப் பெற்றதாகவும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சமூக ஊடகப் பதிவு ஒன்றில், கூறியுள்ளார். டிட்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும், அவர் […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ , லஞ்ச , ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினரால் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கைது

  • September 4, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ , லஞ்ச , ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினரால் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று ஆஜரான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு சுமார் 7.4 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ச கேட்போர் கூடத்திற்கு […]

சிட்னி விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் இரு Qantas விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் ஆபத்திலிருந்து மயிரிழையில் தப்பின. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

10 நாட்கள் ஓய்வில்லாப் பணி: ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிரோடு விளையாடுகிறதா விமானத்துறை?

  • September 4, 2026
  • 0 Comments

சிட்னி விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் இரு Qantas விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் ஆபத்திலிருந்து மயிரிழையில் தப்பின. இந்தச் சம்பவத்தின் போது பணியில் இருந்த பல விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டாளர்கள் (Air traffic controllers) கடுமையான உடல் மற்றும் மனச் சோர்வில் (Fatigue) இருந்தமை Reuters செய்தி நிறுவனத்திற்குக் கிடைத்துள்ள உள்கட்டமைப்புப் பதிவுகள் மற்றும் உரையாடல் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலைமையை “சற்றுப் பைத்தியக்காரத்தனமானது” என அப்போதைய பணிப் பொறுப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். […]

நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளம் பேரழிவு: 9 நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்பு

  • September 4, 2026
  • 0 Comments

நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், பேரழிவு ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, த்ரிசூலி ஆற்றின் நீர்மின் நிலையத்தோடு தொடர்புடைய சுரங்கப்பாதையிலிருந்து இருவர் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேல் த்ரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் (Upper Trishuli 3A Hydropower Station) சுரங்கப்பாதையிலிருந்து மீட்கப்பட்ட இருவரும் சஞ்சய் சா (இயந்திரவியல் மேலாளர்) மற்றும் கபீர் மகர்ஜன் (இயந்திரவியல் மேற்பார்வையாளர்) […]

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. செய்தி

11 வயது சிறுவனின் உயிரை பறித்த நாவல் பழம்: மட்டக்களப்பில் சோகம்

  • September 4, 2026
  • 0 Comments

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவரும், 37 ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்தவருமான ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவனின் வீட்டுக்கு முன்னால் நின்ற நாவற்பழ […]