நேபாளம் பேரழிவு: 9 நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்பு
நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், பேரழிவு ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, த்ரிசூலி ஆற்றின் நீர்மின் நிலையத்தோடு தொடர்புடைய சுரங்கப்பாதையிலிருந்து இருவர் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேல் த்ரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் (Upper Trishuli 3A Hydropower Station) சுரங்கப்பாதையிலிருந்து மீட்கப்பட்ட இருவரும் சஞ்சய் சா (இயந்திரவியல் மேலாளர்) மற்றும் கபீர் மகர்ஜன் (இயந்திரவியல் மேற்பார்வையாளர்) […]













