சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிறைச்சாலையின் நிலைமை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தமை தொடர்பில் நான் ஆழ்ந்த கவலையடைகின்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார். […]













