உக்ரைனுக்கு மேலதிக உதவிகளையும், குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கான எரிசக்தி விநியோக உதவிகளையும் வழங்குவதாக ஜெர்மன் ஜனாதிபதி பிரெட்ரிக் மெர்ஸ் Friedrich Merz உறுதியளித்துள்ளார். செய்தி

உக்ரைனுக்கு மேலதிக உதவி: ரஷ்யாவை சீண்டும் ஜெர்மன்

  • November 3, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கு மேலதிக உதவிகளையும், குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கான எரிசக்தி விநியோக உதவிகளையும் வழங்குவதாக ஜெர்மன் ஜனாதிபதி பிரெட்ரிக் மெர்ஸ் Friedrich Merz உறுதியளித்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியை பெர்லினில் இன்று (03) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கருங்கடல் பகுதியில் ரஷ்யா முன்னெடுத்து வரும் தாக்குதல்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், உலகளாவிய உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கலாம் என்றும் மெர்ஸ் எச்சரித்துள்ளார். “கருங்கடலில் ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல்கள் மேலும் மோதல் தீவிரமடையும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. […]

ஸ்பெயினின் இரண்டாம் பிரிவு கால்பந்துப் போட்டியின்போது ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த டெனெரிப் அணியின் முன்கள வீரர் ஜெசுஸ் டி மிகுவேல் (30) உயிரிழந்துள்ளார். செய்தி விளையாட்டு

கால்பந்து உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இளம் வீரரின் மரணம்

  • November 3, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் இரண்டாம் பிரிவு கால்பந்துப் போட்டியின்போது படுகாயமடைந்த டெனெரிப் அணியின் முன்கள வீரர் ஜெசுஸ் டி மிகுவேல் (30) உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை எப்.சி. அன்டோரா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது, கோல் காப்பாளர் ஜெசுஸ் ஓவோனோவுடன் வேகமாக மோதி ஏற்பட்ட விபத்தில் டி மிகுவேலின் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து மைதானத்திலேயே அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு, அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை திங்கட்கிழமை சீராக இருந்தாலும் […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு கிரீன்லாந்து நாடாளுமன்றம் இன்று (03) ஒப்புதல் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பா செய்தி

ட்ரம்பின் பாதுகாப்பு நகர்வுக்கு கிரீன்லாந்து பச்சைக்கொடி

  • November 3, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு கிரீன்லாந்து நாடாளுமன்றம் இன்று (03) ஒப்புதல் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற முதற்கட்ட விவாதத்தின்போது, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். டென்மார்க்கின் சுயாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாக ட்ரம்ப் தொடர்ச்சியாக வெளியிட்ட கருத்துகளால் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையே ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், கடந்த செப்டெம்பர் மாதம் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் […]

இந்தியாவில் கோயில்களுக்குள் பூசாரிகளால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக மாணவர் செயற்பாட்டாளர் நேஹா போரா தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைக் குறிவைத்து பாரதிய ஜனதா கட்சி விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இந்தியா செய்தி

கோயில் பூசகர்கள்மீது பாலியல் குற்றச்சாட்டு: இந்திய அரசியலில் அடுத்த சர்ச்சை

  • November 3, 2026
  • 0 Comments

இந்தியாவில் கோயில்களுக்குள் பூசாரிகளால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக மாணவர் செயற்பாட்டாளர் நேஹா போரா தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைக் குறிவைத்து பாரதிய ஜனதா கட்சி விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) செயற்பாட்டாளரான நேஹா போரா, பெண்களுக்குப் பாதுகாப்பு அவசியம் எனவும், பிராமணியக் கட்டமைப்பிலிருந்தே பெண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், விலங்குகள் மற்றும் பெண்கள் அடக்குமுறைக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட அமைப்பாக இந்தக் […]

இலங்கையில் கொத்துக் குண்டுகளைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் கொத்துக் குண்டுகளுக்கு தடை

  • November 3, 2026
  • 0 Comments

இலங்கையில் கொத்துக் குண்டுகளைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொத்துக் குண்டுகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றும் வகையில் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது. ஒஸ்லோ உடன்படிக்கை என அழைக்கப்படும் கொத்துக் குண்டுகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி கையொப்பமிட்டது. இந்த உடன்படிக்கையின் கீழான இலங்கையின் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்குவது தொடர்பில், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் […]

இலங்கையின் நிலைபேறான வர்த்தக மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், 10 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ஐரோப்பா செய்தி

இலங்கைக்கு 10 மில்லியன் யூரோ வழங்கும் EU – பின்னணி என்ன?

  • November 3, 2026
  • 0 Comments

இலங்கையின் நிலைபேறான வர்த்தக மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், 10 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பசுமைப் பொருளாதார மாற்றம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன் மூலம் இலங்கையின் வர்த்தகத் துறை சார்ந்த நிறுவனங்களின் இயலளவை மேம்படுத்துதல், சர்வதேச வர்த்தகத் தரநியமங்களுக்கு இணங்கிச் செயற்படுவதை ஊக்குவித்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியச் சந்தைகளை […]

கிரிஷ் நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

பிணை கிடைத்தும் வெளியே வரமுடியாத நிலையில் நாமல்

  • November 3, 2026
  • 0 Comments

கிரிஷ் நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், மற்றொரு வழக்கில் பிணை பெறாத காரணத்தினால், நாமல் ராஜபக்ச தொடர்ந்து விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிரிஷ் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், […]

இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டில் 21 வெளிநாட்டவர்கள் கொழும்பு, மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

கொழும்பில் 21 வெளிநாட்டவர்கள் கைது: பின்னணி என்ன?

  • November 3, 2026
  • 0 Comments

இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டில் 21 வெளிநாட்டவர்கள் கொழும்பு, மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, மருதானை தொழில்நுட்பச் சந்திக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் நேற்று (02) இரவு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 12 சீனப் பிரஜைகள், ஆறு பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் மூன்று இந்தியப் பிரஜைகள் உள்ளடங்குகின்றனர். சீனப் பிரஜைகளில் இரு […]

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் பொலிஸாரின் வீதித் தடையை மீறித் தப்பியோடிய சந்தேகநபர்கள் கைவிட்டுச் சென்ற பொதியிலிருந்து 14 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. செய்தி

பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்பு: கிளிநொச்சியில் பரபரப்பு

  • November 3, 2026
  • 0 Comments

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் பொலிஸாரின் வீதித் தடையை மீறித் தப்பியோடிய சந்தேகநபர்கள் கைவிட்டுச் சென்ற பொதியிலிருந்து 14 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் நேற்று முன்தினம் (02) இரவு முன்னெடுக்கப்பட்ட வீதித் தடுப்பு நடவடிக்கையின்போதே இந்தப் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, கடமையில் இருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிடுமாறு சமிக்ஞை செய்துள்ளனர். […]

இலங்கை செய்தி

குளிரைப் போக்க BBQ அடுப்பு: நுவரெலியாவில் தம்பதியினர் பலி

  • November 3, 2026
  • 0 Comments

நுவரெலியா, மீப்பிலிமன பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், மூடிய அறைக்குள் பார்பிக்யூ (BBQ) அடுப்பைப் பயன்படுத்தியதால் வெளியான நச்சு வாயுவைச் சுவாசித்து உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அவிசாவளையைச் சேர்ந்த குறித்த தம்பதியினர், நுவரெலியா மீப்பிலிமன பகுதியில் சுற்றுலா விடுதியொன்றின் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளனர். விடுதியின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை அருகிலுள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர். நுவரெலியா பகுதியில் நிலவிய கடும் குளிர் […]