இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்தியா உலகம் செய்தி

இந்திய பிரதமர், ஈரான் ஜனாதிபதி நேரடி சந்திப்பு

  • September 1, 2026
  • 0 Comments

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டுக்கு இணையாகவே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், இவ்விரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும். இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான சமீபத்திய உறவுகள் குறித்து ஆய்வு செய்த தலைவர்கள், கூட்டு ஒத்துழைப்பை மேலும் […]

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்வர் விஜய் பிரித்தானியா செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

10 ஆம் திகதி பிரித்தானியா வருகிறார் முதல்வர் விஜய்

  • September 1, 2026
  • 0 Comments

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்வர் விஜய் பிரித்தானியா செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்துள்ளது. தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு. கடந்த மாதம் சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – 2026’ நடைபெற்றது. முதல்வர் விஜய் தலைமையிலான இந்த […]

இலங்கையின் பணவீக்கம் 8 சதவீதமாக அதிகரிப்பு இலங்கை செய்தி

இலங்கையின் பணவீக்கம் 8 சதவீதமாக அதிகரிப்பு

  • September 1, 2026
  • 0 Comments

இலங்கையில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) அடிப்படையிலான பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் 8% ஆக உயர்ந்து, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. ஜூலை மாதத்தில் 7.3% ஆக இருந்த பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 0.7%வீதத்தினால் உயர்ந்துள்ளது. உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட விளைவே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று மத்திய வங்கி கூறியுள்ளது. உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3% ஆக இருந்த நிலையில் இருந்து, ஓகஸ்ட் மாதத்தில் 8.5% ஆக உயர்ந்துள்ளது. இதுவே […]

சிட்னியில் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட சிறுவன் ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னியில் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட சிறுவன்

  • September 1, 2026
  • 0 Comments

சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சிட்னியின் முக்கிய மையப்பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதை சிறுவர் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2024 ஆகஸ்ட் மாதம், மேற்கு சிட்னியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கூட்டாட்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது அச்சிறுவனுக்கு 14 வயது. அவரது கணினியில் தீவிரவாதக் கருத்துக்கள் அடங்கிய 40-க்கும் மேற்பட்ட காணொளிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெயர் வெளியிடப்படாத அச்சிறுவன், செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற தண்டனை விவரங்கள் மீதான […]

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத்துடனான பல மாத கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவச் செயலர் டான் டிரிஸ்கோல் தனது ராஜினாமா கடிதத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளார் என தெரியவருகின்றது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க ராணுவ செயலாளர் ராஜினாமா

  • September 1, 2026
  • 0 Comments

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத்துடனான பல மாத கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவச் செயலர் டான் டிரிஸ்கோல் தனது ராஜினாமா கடிதத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளார் என தெரியவருகின்றது. துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் டிரிஸ்கோல், ஹெக்சேத்தின் தலைமையின் கீழ் பென்டகனில் இருந்து நீக்கப்பட்ட அல்லது பதவியை இழந்த முன்னணி அதிகாரிகளின் வரிசையில் தற்போது இணைந்துள்ளார். மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் போரில் ஈடுபட்டுள்ள சூழலில், ஈரான் உடனான போர் […]

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கக் கோரும், அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது. இலங்கை செய்தி

22மீது 30 இற்கு மேற்பட்ட மனுக்கள்: இன்று உயர்நீதிமன்றில் விசாரணை

  • September 1, 2026
  • 0 Comments

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கக் கோரும், அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது. இந்த திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் 30இற்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை விசாரிப்பதற்காக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வை நியமித்துள்ளார். பிரதம நீதியரசர் தலைமையிலான இந்த அமர்வில், நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபயசேகர, சம்பத் அபயகோன் மற்றும் […]

அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

கால்பந்து களத்தில் ஒரு சகாப்தம் நிறைவு: ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி

  • August 31, 2026
  • 0 Comments

அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த முடிவு தனக்கு வேதனையளிப்பதாக இருந்தாலும், இதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்குக் தலைவராக நின்று வழிகாட்டிய 39 வயதான மெஸ்ஸி, தனது நாட்டிற்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா […]

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு மக்கள் வாக்கெடுப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்குப் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சர் தோர்கெர்டூர் குன்னார்ஸ்டோட்டிர் (Thorgerdur Gunnarsdottir) தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சர்வஜன வாக்கெடுப்பு தோல்வி: பாதுகாப்பை பலப்படுத்த மாற்றுவழி தேடுகிறது ஐஸ்லாந்து

  • August 31, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு மக்கள் வாக்கெடுப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்குப் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சர் தோர்கெர்டூர் குன்னார்ஸ்டோட்டிர் (Thorgerdur Gunnarsdottir) தெரிவித்துள்ளார். இதற்காக இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது ஆகிய விருப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்துவதற்கு அரசாங்கம் முன்வைத்த […]

கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு இலங்கை செய்தி

கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

  • August 31, 2026
  • 0 Comments

ஏற்றுமதியை முதன்மைப்படுத்திய 2026 ஆம் ஆண்டு தேசிய கனிமக் கொள்கையின் படி, இந்நாட்டின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், இலங்கை கனிம மணல் சங்கம் (SLMSA) மற்றும் புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கனிம வளங்களின் ஆராய்ச்சி, அகழ்வு மற்றும் பெறுமதி சேர்ப்பு செயல்முறைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்நாட்டு கனிம வளங்களை தேசிய […]

தொல்பொருள் திணைக்களத்தின் நிர்மாண பணிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை இலங்கை செய்தி

தொல்பொருள் திணைக்களத்தின் நிர்மாண பணிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

  • August 31, 2026
  • 0 Comments

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளுக்குத் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியா பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே அப்படியே இடைநிறுத்துமாறும், மேற்கொண்டு எந்தவிதமான பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம் என்றும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த இடத்தில் முன்னர் பிள்ளையார் கோயில் […]