அரசியல் இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 09 எலும்புக் கூடுகள் அடையாளம்

09 More Skeletal Remains Identified in Chemmani

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது.

செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 48 வது நாளாக நடைபெற்றது.

இதன்போது மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 07 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த 102 நாள் அகழ்வுகளில் இதுவரை 524 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 513 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை