இந்தியா செய்தி

இந்தியாவில் மீண்டும் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் ஊழியர் தேர்வு வாரியம் (JSSC) மூலம் நடத்தப்பட்ட அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா’ (JLKM) கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தலைமையில் மாணவர்கள் இன்று ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவையை நோக்கி முற்றுகைப் பேரணி நடத்தினர்.

9 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு, தேவேந்திர நாத் மஹ்தோ ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறே இப்பேரணியில் கலந்துகொண்டார்.

பழைய சட்டப்பேரவை கட்டிடத்திலிருந்து தொடங்கிய பேரணி, புதிய சட்டப்பேரவை வளாகத்தை நெருங்கியபோது அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றது.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பலமுறை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், 6 முறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது.

போராட்​ட பின்​னணி

கடந்த சில மாதங்​களாகவே ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (ஜேபிஎஸ்​சி) மற்​றும் ஊழியர் தேர்வு வாரி​யம் (ஜேஎஸ்​எஸ்​சி) மூலம் நடத்தப்படும் தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடப்​ப​தாகக் கூறி மாணவர்​கள் போராடி வரு​கின்​றனர்.

அரசு தரப்​பில் இதுவரை ஆறு முறை பேச்​சு​வார்த்தை நடத்தப்பட்ட போ​தி​லும், மாணவர்​களின் முக்​கியக் கோரிக்கைகள் ஏற்கப்பட​வில்​லை. இதனால், மாநிலம்​ தழு​விய அளவில்​ போராட்டங்​கள்​ தீவிரமடைந்து வருகின்​றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி