வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் சஜித் அவசர சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கவனத்தில் கொள்ளப்பட்டன. குறிப்பாக, இம்மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிராந்திய மட்டப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் […]













