ட்ரம்பின் உத்தரவையடுத்து 5 நாட்களாக சுருக்கப்பட்ட அமெரிக்கா – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி
தென் கொரியாவில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்பைக் கணிசமாகக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து நடத்தும் ஆண்டாந்திரக் கூட்டு ராணுவப் பயிற்சியின் நாட்களை 11 நாட்களிலிருந்து 5 நாட்களாகக் குறைக்கப் போவதாகவும், களப் பயிற்சிகளைக் கட்டுப்படுத்தப் போவதாகவும் இரு நட்பு நாடுகளும் புதன்கிழமை தெரிவித்துள்ளன. கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காகச் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென் கொரியாவிற்கு வருகை தரும் நிலையில் […]













