அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, எல் சால்வடார், கியூபா உள்ளிட்ட அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும், ஐ.நா. சபையும் (UN) மீட்புக் குழுக்களையும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. உலகம் செய்தி

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – வெனிசுலாவில் சர்வதேச மீட்புக்குழுக்கள்

  • June 26, 2026
  • 0 Comments

வெனிசுலாவைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் அவசரப் பணிகளில் சர்வதேச மீட்புக் குழுவினர் இணைந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, எல் சால்வடார், கியூபா உள்ளிட்ட அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும், ஐ.நா. சபையும் (UN) மீட்புக் குழுக்களையும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. இந்த நிலநடுக்க பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் […]

காசா மற்றும் லெபனானில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த மனக்கசப்பு சர்வதேச அளவில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. உலகம் செய்தி

டிரம்ப்-நெதன்யாகு உறவில் விரிசலா?

  • June 26, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் இடையிலான உறவு ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புகழ்பெற்ற பத்திரிகையாளர்களான மேகி ஹேபர்மேன் மற்றும் ஜொனாதன் ஸ்வான் இணைந்து எழுதியுள்ள புதிய புத்தகம், இரு தலைவர்களுக்கும் இடையிலான பதட்டங்களை விவரிக்கிறது. செப்டம்பர் 2025-இல் ஐ.நா பொதுச் சபையின் கூட்டத்தின் இடையே நடந்த ஒரு தொலைபேசி உரையாடலில், காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப், நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுத்தார். “எல்லோரும் உன்னால் சோர்வடைந்துவிட்டார்கள், யூதர்களும் […]

பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் முதன்முறையாக, மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வரி விவரங்களை வெளியிட்டுள்ளார் . 2024-25 நிதியாண்டில் மன்னர் 12.9 மில்லியன் பவுண்டுகள் வரியாகச் செலுத்தியுள்ளார். ஐரோப்பா செய்தி

வரலாற்றில் முதன்முறையாக வரி விவரங்களை வெளியிட்ட பிரித்தானிய மன்னர்

  • June 26, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் முதன்முறையாக, மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வரி விவரங்களை வெளியிட்டுள்ளார் . 2024-25 நிதியாண்டில் மன்னர் 12.9 மில்லியன் பவுண்டுகள் வரியாகச் செலுத்தியுள்ளார். அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆட்சியாளர் தனது வரி விவரங்களை இந்த வழியில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். செலுத்தப்பட்ட வரியின் அளவை ஆராயும்போது, ​​இங்கிலாந்தில் அதிக வரி செலுத்துபவர்களில் மன்னர் சார்லஸும் ஒருவர். வேல்ஸ் இளவரசர் வில்லியம், அதே காலகட்டத்தில் 7.76 மில்லியன் பவுண்டுகள் வரி […]

ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் புறப்பட்டுச் செல்லும் மிகப்பெரிய குழு இதுவாகும். இலங்கை செய்தி

ஐ.நா. அமைதிப்படைக்கு இலங்கையிலிருந்து ராணுவம்

  • June 26, 2026
  • 0 Comments

ஐ.நா. அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (26) முற்பகல் பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்தில் கலந்துகொண்டார். ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் புறப்பட்டுச் செல்லும் மிகப்பெரிய குழு இதுவாகும். இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ஒருவர் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் எங்கு […]

கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

பாதாள குழுவுடன் உறவு: கட்சி உறுப்பினரை நீக்கியது சஜித் அணி

  • June 26, 2026
  • 0 Comments

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக ரத்து செய்துள்ளது. கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். “2023 ஆம் ஆண்டளவில் அபேசிங்க கட்சியின் உறுப்பினராகவோ அல்லது அமைப்பாளராகவோ செயற்படவில்லை.” என்று SJP செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் […]

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொன்னையா தணேஸ்வரன், லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் கைது

  • June 26, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொன்னையா தணேஸ்வரன், லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குச்சவெளி மற்றும் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்தவர் எனவும் குறிப்பிடத்தக்கது. இவர், லஞ்ச ஊழல் ஆணை குழுவினால் கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

பெரிய திட்டமிடல்கள் இன்றி, மிகக் குறைந்த ஆயுதங்களைக் கொண்டு திடீர் தாக்குதல்களை அவர்கள் நடத்துவதால், இவர்களைக் கண்காணிப்பது அல்-கொய்தா அல்லது ஐஎஸ்ஐஎஸ் (ISIL) அமைப்புகளைக் கண்காணிப்பதை விட மிகவும் கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஈரானால் ஆபத்து: உளவுப் பிரிவு எச்சரிக்கை

  • June 26, 2026
  • 0 Comments

உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும்சூழ்நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற குகுழுவொன்று, ஆஸ்திரேலிய மண்ணில் தீவைப்பு, பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் படுகொலைகளைக் கூட நிகழ்த்தக்கூடும் என்று அந்நாட்டு உளவுத்துறை அமைப்பான ASIO-வின் தலைமை இயக்குநர் மைக் பர்கெஸ் (Mike Burgess) எச்சரித்துள்ளார். தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புச் சூழல் சிதைவடைந்து வருவதாகவும் உளவுத்துறை பிரதான சுட்டிக்காட்டியுள்ளார். சிட்னி Bondi Beach பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பெர்த்தில் […]

வளைகுடா நாடுகள், ஈரானை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்காமல், மத்திய கிழக்கை அணு ஆயுதங்களற்ற மண்டலமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. முக்கிய செய்திகள்

‘அணுசக்தி’- அமெரிக்கா, இஸ்ரேல் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்

  • June 26, 2026
  • 0 Comments

ஈரானின் அமைதியான அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது. வளைகுடா நாடுகள், ஈரானை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்காமல், மத்திய கிழக்கை அணு ஆயுதங்களற்ற மண்டலமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது வெளிநாடுகளின் தலையீடு இன்றி, உள்ளூர் நாடுகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை ஈரான் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. மேலும், தனது தற்காப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் திறன்களை ஒரு […]

இஸ்ரேல் உண்மையான அமைதியை விரும்பவில்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் லெபனானின் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். உலகம் செய்தி

இஸ்ரேலை அடக்க மோதலே ஒரே வழி: லெபனான் முன்னாள் ஜனாதிபதி சர்ச்சை கருத்து

  • June 26, 2026
  • 0 Comments

இஸ்ரேலுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் இருந்து லெபனான் முழுமையாக விலக வேண்டும் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி எமில் லஹுத் என்று Emile Lahoud வலியுறுத்தியுள்ளார். வாஷிங்டனில் இஸ்ரேலிய குழுவுடன் புகைப்படம் எடுக்க மறுத்த லெபனான் ராணுவ அதிகாரிகளின் கௌரவமான செயலை அவர் வெகுவாகப் பாராட்டினார். இஸ்ரேல் உண்மையான அமைதியை விரும்பவில்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் லெபனானின் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஒரு மூலோபாய வெற்றியை ஈட்டியுள்ளதாக […]

காணி தொடர்பில் இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , அமைச்சர் அனுர கருணாதிலக்க, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு: நாடாளுமன்றத்தில் முக்கிய கூட்டம்

  • June 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. காணி தொடர்பில் இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , அமைச்சர் அனுர கருணாதிலக்க, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இதன்போது, காணி உரிமை தொடர்பான குறைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் […]