உலகம் செய்தி

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – வெனிசுலாவில் சர்வதேச மீட்புக்குழுக்கள்

அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, எல் சால்வடார், கியூபா உள்ளிட்ட அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும், ஐ.நா. சபையும் (UN) மீட்புக் குழுக்களையும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து அனுப்பி வருகின்றன.

வெனிசுலாவைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் அவசரப் பணிகளில் சர்வதேச மீட்புக் குழுவினர் இணைந்துள்ளனர்.

அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, எல் சால்வடார், கியூபா உள்ளிட்ட அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும், ஐ.நா. சபையும் (UN) மீட்புக் குழுக்களையும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து அனுப்பி வருகின்றன.

இந்த நிலநடுக்க பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கங்கள், வெனிசுலாவில் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் பதிவான மிக வலுவான நிலநடுக்கங்களில் ஒன்றாகும். இதன் அதிர்வுகள் அண்டை பிராந்தியங்கள் முழுவதிலும் உணரப்பட்டன.

இந்த விபத்தில் சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளதோடு, 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக வெனிசுலா சுகாதார அமைச்சர் கார்லோஸ் அல்வராடோ தெரிவித்துள்ளார். மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி