காணி தொடர்பில் இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , அமைச்சர் அனுர கருணாதிலக்க, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு: நாடாளுமன்றத்தில் முக்கிய கூட்டம்

  • June 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. காணி தொடர்பில் இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , அமைச்சர் அனுர கருணாதிலக்க, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இதன்போது, காணி உரிமை தொடர்பான குறைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் […]

Australia’s Harry Souttar, Aiden O’Neill and Paul Okon-Engstler celebrate after the match செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலியா மகிழ்ச்சி: பதற்றத்தில் பராகுவே அணி

  • June 26, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், பராகுவே அணிக்கு எதிரான போட்டியை 0-0 என்ற கணக்கில் ‘டிரா’ (Draw) செய்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி பெற்றுள்ளது. பராகுவே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பது மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே அமையும் என்பதால் அந்த அணி பெரும் பதற்றத்துடன் காத்திருக்கிறது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை […]

உயர் நீதிமன்றத்தில் எட்டுக்கும் மேற்பட்ட நீதியரசர் பணியிடங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் வெற்றிடமாக உள்ளன. அரசியல் இலங்கை செய்தி

உயர் நீதிமன்ற வெற்றிடங்கள்- நாடாளுமன்றத்தில் விவாதம் கோரி பிரேரணை

  • June 26, 2026
  • 0 Comments

உயர் நீதிமன்றத்தில் நிலவும் நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்தக் கோரியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (26) விசேட பிரேரணை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தில் எட்டுக்கும் மேற்பட்ட நீதியரசர் பணியிடங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் வெற்றிடமாக உள்ளன. இந்த நீண்டகால தாமதம் காரணமாக, நாட்டின் சட்டத்தின் ஆட்சியில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான […]

போர்க்கால சூழலுக்குப் பிறகு தற்காலிகமாக அதிகரித்துள்ள இந்த எண்ணெய் வரத்து, எதிர்காலத்தில் மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலகம் செய்தி வணிகம்

கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு

  • June 26, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் பதற்றங்கள் தணிந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து அதிகரித்துள்ளதும், சவுதி அரேபியாவின் முக்கியமான முனையத்தில் மீண்டும் ஏற்றுமதி தொடங்கியதும் சந்தையில் விநியோகப் பற்றாக்குறை குறித்த அச்சத்தைக் குறைத்துள்ளது. எனினும், ஏமனில் சரக்குக் கப்பல் மீதான தாக்குதல் மற்றும் ஈரானின் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக கடற்பயண பாதுகாப்பில் இன்னும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. சீனாவில் நிலவும் குறைந்த எண்ணெய் தேவை மற்றும் வெனிசுலாவில் […]

இந்த ஓட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு வாசகத்தை முதல்வர் விஜய் எழுதினார். இந்தியா செய்தி தமிழ்நாடு

போதைப் பொருள் ஒழிப்பு சமரை ஆரம்பித்து வைத்தார் விஜய்

  • June 26, 2026
  • 0 Comments

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் இன்று ஆரம்பித்து வைத்தார். சென்னை – காமராஜர் சாலையில் இந்த ஓட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் விஜய்யும் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசின் உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், தடகள ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த ஓட்டத்தை தொடங்கி […]

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சமூக ஊடகப் பயன்பாடு: சட்டத்தை மேலும் கடுமையாக்கும் ஆஸ்திரேலியா

  • June 26, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய அரசாங்கம், சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள வயதுக் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்குரிய கடுமையான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese உறுதியளித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. எனினும், சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இந்நிலையிலேயே தற்போதைய சட்டங்கள் போதுமான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை […]

மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தீவிர பறவைக் காய்ச்சல், மேற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு கடல் பறவைகளிடமும் (Migratory seabirds), தெற்கு ஆஸ்திரேலியாவில் (South Australia) ஒரு பறவையிடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்

  • June 26, 2026
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு பறவைக்கு ‘H5 பறவைக் காய்ச்சல்’ (H5 bird flu) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட – பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்படும் பறவைகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தீவிர பறவைக் காய்ச்சல், மேற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு கடல் பறவைகளிடமும் (Migratory seabirds), தெற்கு ஆஸ்திரேலியாவில் (South Australia) ஒரு பறவையிடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்பெரன்ஸ் (Esperance) அருகே உள்ள […]

Hossam Hassan, head coach of Egypt, has voiced support for the Iranian team ahead of both sides' meeting in Seattle on Friday செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

ஈரான் அணிக்கு அமெரிக்கா பாரபட்சம்: எகிப்து பயிற்சியாளர் சீற்றம்

  • June 26, 2026
  • 0 Comments

“உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும்” என்று எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹோசாம் ஹாசன் (Hossam Hassan) தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் ஈரான் பங்கேற்பதற்கு, அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான விதிகளால் தமது அணி வீரர்களின் உடல்நிலை மற்றும் தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையிலேயே ஈரான் அணிக்கு ஆதரவாக, எகிப்து அணி குரல் கொடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை […]

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த போரட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது என்று குறிப்பிட கூடாது. அது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் ஆதங்கம் மற்றும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாகும். அரசியல் இலங்கை செய்தி

நீதிக்கான இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருப்பது?

  • June 26, 2026
  • 0 Comments

“செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பான போராட்டங்களை அரசியலாக கருத வேண்டாம். அது நீதிக்கான குரல். எனவே, செம்மணி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவும்.” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ முன்னாள் நீதி அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோரும் யாழ்ப்பாணம் வந்தனர். மக்களைச் சந்தித்து வாக்குறுதி அளித்தனர். ஆனால் எதுவும் […]

Sweden's forward Anthony Elanga shoots but fails to score next to Japan's defender Hiroki Ito during the 2026 World Cup Group F football match at Dallas Stadium in Arlington on June 25, 2026 செய்தி விளையாட்டு

ஜப்பான், ஸ்வீடன் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற்றம்

  • June 26, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை குரூப் F பிரிவின் விறுவிறுப்பான ஆட்டத்தில், ஜப்பான் அணிக்கு எதிராக அந்தோணி எலங்கா (Anthony Elanga) 62-வது நிமிடத்தில் அடித்த அபாரமான சமன்படுத்தும் கோல் (Equaliser) மூலம் ஸ்வீடன் அணி 1-1 என்ற கணக்கில் போட்டியை டிராவில் (Draw) முடித்தது. இதன் மூலம் இரு அணிகளும் உலகக் கோப்பையின் அடுத்த சுற்றுக்கு (Knockout rounds) முன்னேறுவதை உறுதி செய்துள்ளன. இந்த ஆட்டத்தின் மூலம் 5 புள்ளிகளுடன் குரூப் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜப்பான் […]