ஐரோப்பா

உக்ரைன் மீது ஏவுகணை மழை – 11 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரஷ்யா தீவிர தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

இந்த தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒடெசா பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk), டொனெட்ஸ்க் (Donetsk), ஜபோரிஜியா (Zaporizhzhia), கீவ் (Kyiv), சுமி (Sumy), கார்கிவ் (Kharkiv) மற்றும் கெர்சன் (Kherson) ஆகிய பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த தாக்குதல்களுக்காக ரஷ்யா பல்வேறு வகையான 129 ட்ரோன்களையும், அத்துடன் இஸ்காண்டர்-எம்/கேஎன்-23 (Iskander-M/KN-23) பாலிஸ்டிக் ஏவுகணைகள், எட்டு கலிப்ர் (Kalibr) குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஆறு வழிகாட்டப்பட்ட Kh-59/69 ஏவுகணைகளையும் பயன்படுத்தியதாக உக்ரைன் விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் உக்ரைன்  110  வான்வழி இலக்குகளை அழித்ததாக தெரிவித்துள்ளது.  ஆறு கலிப்ர் ஏவுகணைகள், இரண்டு Kh-59/69 ஏவுகணைகள், ட்ரோன் மூலம் ஏவப்பட்ட ஒரு S-8000 பண்டரோல் (Banderol) குரூஸ் ஏவுகணை மற்றும் 101 ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் இவ்வாறு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்