கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் கைது
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொன்னையா தணேஸ்வரன், லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், குச்சவெளி மற்றும் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்தவர் எனவும் குறிப்பிடத்தக்கது.
இவர், லஞ்ச ஊழல் ஆணை குழுவினால் கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.





